தினமும் 2 அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் !

Subscribe to our YouTube Channel

செடியின் அடிப்பகுதியில் அல்ல‍து தண்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும்

அந்த இடங்களில் கொத்து கொத்தாக இந்த‌ அத்திப் பழங்கள் ( Common Fig / #Common #Fig / #CommonFig) தொங்கியபடி காணப்படும்.

இது மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது அழகிற் கும் மா மருந்தாக பயன்படுகிறது.

அழகுக்கு அழகுசேர்ப்ப‍து தலைமுடி. அந்த தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும்

விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து காணப்படுவது அத்திப்பழம்.

தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்க ளை சாப்பிட்டு வர முடி உதிர்தலை கட்டுப்படுத்தி,

முடி வளர்ச்சி ( #HairGrowth )யை அதிகரிக்கும் இதனால் வழுக்கை விழுவதையும் தவிர்க்க முடியும். #HairGrowth


அத்திப்பழத்தில் உடல் நலத்திற்கு தேவையான பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும்,

வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய இருக்கிறது.அத்திப்பழங்கள் ஊதா,மஞ்சள்,கருப்பு,ப்ரெளன் போன்ற நிறங்களில் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

அத்திப்பழங்கள் சுருக்கங்கள் நிறைந்த தோல்களை கொண்டவை.இவை விரைவாக அழுகும் தன்மை உள்ளதால்

பெரும்பாலும் இவை நமக்கு காய்ந்த வடிவத்திலே கிடைக்கிறது.காய்ந்த அத்திப்பழத்தில் அதிக நன்மைகள் இருக்கின்றது.

இது மிகவும் சுவை நிறைந்ததாகவும் உள்ளது.அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டால் நாம் உடல்நலமுடன் வாழமுடியும்.

அத்திப்பழத்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என கிழே காண்போமா.

அத்திப்பழத்தில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளது.

இதை சாப்பிடுவதால் வயிற்று உபாதைகள் சரியாகி மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கிறது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து நிறைய உள்ள பழங்களை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும். நிதமும் அத்திப்பழம் உட்கொண்டால் கொழுப்பு குறையும்.

அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது.இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது.

குடலைச் சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்றுநோயை அத்திப்பழம் தடுக்கிறது.

அத்திப்பழங்களை பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் உடலின் சக்தியை அதிகப்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.

அத்திப்பழ மரத்தின் இலைகளிலும் நார்ச்சத்து உள்ளது இலைகளை சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பதை சீராக வைத்து கொள்ள முடியும்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் நமக்கு வேகமாக ஜீரணம் ஆகிறது.இது மூல நோய் வராமல் தடுக்க வழி செய்கிறது.

அத்திப்பழம் சாப்பிட்டால் வாய்நாற்றம் நீங்கும். அத்திப்பழம் உண்பதால் உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும்.

இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரதச்சத்து, சர்க்கரை சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.

மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.

இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

Facebook Comments