இருட்டு அறையில் முரட்டு குத்து !

[sm-youtube-subscribe]

இரண்டு நாட்களுக்கு முன்பு வரையிலும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

திரைப்படத்தின் குறிப்பிட்ட சில ஏரியாக்களின் உரிமைகள் மட்டுமே வியாபாரம் ஆகியிருந்தன.

தற்போது அனைத்து ஏரியாக்களும் சுமார் 7.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 திரையரங்குகள்வரை படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர ஹர மஹாதேவகி படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

28 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விநியோக உரிமை 5.25 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

இப்படத்தின் டீசர், பாடல்கள், போஸ்டர்கள் என படம் சம்பந்தப்பட்டு வெளிவந்த அனைத்திலும் வாலிபர்களைக் கவரும் அம்சங்கள் மிகுதியாக இருந்தன.

படத்தில் மட்டுமே இது போன்ற காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர் என நினைக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் இப்படத்தின் செய்திகளைக் கூறுவதற்காக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிலும்

ஆபாசமாகப் பேசிப் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தார் சந்தோஷ்.

 

அது மட்டுமல்ல, “இப்படிப்பட்ட படங்கள் வந்தால்தான் பாலிவுட்டைப் போல தமிழ் சினிமாவும் வளரும்.

இங்குள்ள ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கத் தெரியவில்லை. உலக சினிமாவில் இப்படிப்பட்ட படங்கள் இருக்கின்றன” என்றார்.

இயக்குநர் சந்தோஷிடம் ஒரு நிருபர் “நாட்டில் ஏற்கெனவே பாலியல் வன்முறை விவகாரம் பெருகிவிட்டது.

இந்த மாதிரியான படங்கள் வந்தால் அது இன்னும் அதிகரிக்காதா?” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த இயக்குனர் சந்தோஷ்,

“இந்தப் படத்தில் அழகா ஒரு மெசேஜ் சொல்லியிருக்கேன். சொந்தக் கையில் சொர்க்கம் காணுவோம்.

வெளியில போய் எதுவும் பண்ணாதீங்க. அவங்கவங்களுக்கு கை இருக்கு” எனப் பூடகமாக பதில் கூறினார்.

இயக்குநர் பேசியதைக் கேட்டு மேடையில் உடன் அமர்ந்திருந்த நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி யாஷிகா ஆனந்த்,

எதிரில் இருந்த படக்குழுவினர் கைதட்டி ரசித்தார்கள்.

ஒரு மேடையில், பத்திரிகையாளர்கள் முன்பே இப்படிப் பேசுபவர் படத்தை எப்படி எடுத்திருப்பாரோ என்கிற சிந்தனையில் மீடியா மூழ்கியது.

ஆனால், இதற்கு நேர்மாறாக வியாபார உலகம் சூடுபிடித்தது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் பேசியது திரைத்துறையில் வேகமாகப் பரவியது.

இதன் காரணமாகவோ என்னவோ, உடனடியாக இந்தப் படத்தின் உரிமையை போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள் விநியோகஸ்தர்கள்.

முதல் நாள் இருட்டு அறையில் முரட்டு குத்து மிகப் பெரும் ஓப்பனிங்குடன் கல்லா கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்களில் சுமார் 7 கோடி மொத்த வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு விநியோகஸ்தர்களால்,

பெரும் தொகைக்கு இந்தப் படத்தின் ஏரியா வியாபாரம் முடிக்கப்பட்டிருக்கிறது.

Iruttu Arayil Murattu Kuthu – Moviebuff Sneak Peek | Gautham Karthik | Santhosh P Jayakumar

Total Page Visits: 229 - Today Page Visits: 1