பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் ! புதிய ஆடியோ சர்ச்சை !

Advertisement

Subscribe to our YouTube Channel

தமிழகத்தின் ‘செம ஹாட்’ டாபிக் ஆகியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தன்னிடம் உதவி கேட்டுவந்த ஓர் இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி,

அந்தப்பெண்ணுக்குக் குழந்தையும் பிறந்திருப்பதாக ஜெயக்குமாரின் பெயருடன் வெளியாகியிருக்கும் பிறப்புச் சான்றிதழையும்,

அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்களையும் வெளியிட்டுப் பந்தி வைக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

மேற்கண்ட சம்பவத்தில் என்னதான் நடந்தது, யார் அந்த இளம்பெண், திரைமறைவில் இப்போது நடப்பது என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் மிக முக்கிய அமைச்சர் என்றால் அது ஜெயகுமார்தான்.

பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பது என இன்று வரை கோட்டையில் அவர் கொடி கட்டிப் பறக்கிறார்.

இதேபோல் பிரச்சனைகள் என்று தனது தொகுதி மக்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு நிச்சயமாக உதவிகளையும செய்வார் என்ற பெயர் அவருக்கு உள்ளது.

அமைச்சர் ஜெயகுமாரை சந்திக்க தொகுதி மக்கள் வந்துவிட்டால் அமைச்சர் வீட்டில் இருந்து ஒரு டோக்கன் கொடுக்கப்படும்.

அந்த டோக்கனை அவரது வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு ஹோட்டலில் கொடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். இது அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

இப்படி இருக்கும்போது தான் ஒருநாள் ஒரு பெண்ணும் அவரது அம்மாவும்  அமைச்சரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவி செய்யப்போய்தான் அமைச்சர் ஜெயகுமார் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண்னின் அம்மா . அமைச்சரிடம் பேசிய உரையாடல்தான் இப்போது வைரலாகி வருகிறது.

இந்தத் தகவல்கள் எப்படியோ கசிந்து தினகரன் காதுக்குப் போக… வெற்றிவேல் மூலமாக அந்தப் பெண்ணை கஸ்டடி எடுத்திருக்கிறார்கள் ..

3ஆவது மாதமாகக் குழந்தை வளர ஆரம்பித்ததில் தொடங்கி முழுக்கவே தினகரன் குரூப் கஸ்டடியில் அந்தப் பெண் இருக்கிறார்.

மருத்துவமனையில் செக் அப்புக்கு போகும் போதே அப்பா பெயரை ஜெயகுமார் எனத் தெளிவாகப் பதிவு செய்கிறார்கள்.

பத்து மாதத்துக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட்டில் ஆண் குழந்தை பிறக்கிறது.

குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலும் அப்பாவின் பெயர் ஜெயகுமார் என பதிவிட்டு மாநகராட்சியில் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள்.

இதை எப்போது வெளிடுவது என்பது குறித்து டிடிவி தரப்பினர் யோசித்துக் கொண்டிருந்போது,

அண்மைக்காலமாக தினகரனை  அமைச்சர் சரமாரியாக தாக்கிப் பேசியது அவர்களை கடுப்பாக்கியுள்ளது.

இதையடுத்துதான் அந்த ஆடியோவை வெளிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வெற்றிவேல்

தரப்பு வீடியோ ஆதாரம் ஒன்றையும்  வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெண்,  அவரது தாய் ஆகியோர் அமைச்சருடன் பேசும் அந்த வீடியோ அடுத்து அதிர்ச்சியைக் கிளப்பும் என வெற்றிவேல் தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் அமைச்சர் ஜெயகுமாரோ இதை முற்றிலும் மறுக்கிறார். தன் மேல் பொறாமை கொண்டுள்ள எதிர் தரப்பினர்

இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள் என்றும்
இப்பிரச்சனை தொடர்பாக எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும்  தில்லாக சொல்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.

நன்றி – https://tamil.asianetnews.com

 

Facebook Comments
Total Page Visits: 3 - Today Page Visits: 3