இலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த ! பதற்றத்தில் மக்கள் !

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கையின் புதிய பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

இலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியைக் கலைத்துள்ளது.

இதனையடுத்துப் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு

புதிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ளார்.

இலங்கை பிரதமாரக ரணில் விக்கிரமசிங்கே பதவி வகித்து வந்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேற்றுமை காரணமாக பிள்வு ஏற்பட்டுள்ளது. அதனால் ரணில் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

அதை ஒட்டி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் 11 ஆவது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவருக்கு தமது அலுவலகத்தில் நடந்த விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இராணுவத்திற்கும்,தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த இறுதிக் கட்டப் போரில் ஜனாதிபதியாகவிருந்தவர் மஹிந்த ராஜபக்ஸ.

கடந்த- 2005 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர் 2015 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில்

அவரது அமைச்சரவையில் அமைச்சுப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனா புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

இதனையடுத்து இறுதிப்போரில் ராஜபக்ஸ புரிந்த போர்க் குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Total Page Visits: 2 - Today Page Visits: 1