உயர் நீதிமன்றம் அதிரடி! பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.!

Advertisement

கடந்த 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலு அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டது.

மேலும், கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட 20 உத்தரவுகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்தது.

தமிழக கோவில்களில் சாமி சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார்.

இதற்கிடையே, அவரை ரயில்வே பாதுகாப்பு படைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிரான வழக்கில்,

ஆனால் பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், சிலைகடத்தல் குறித்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை பிறப்பித்தது.

சிலைகடத்தல் குறித்த வழக்கை சிபிஐ மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி,

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வு, ”தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது மட்டுமல்லாமல்,

ஒரு நிமிடம் கூட தமிழக அரசின் அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நேற்று (29.11.2018) இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மதியம் 1.30 மணி அளவில் வழங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன்,

ஆதிகேசவலு அடங்கிய அமர்வு அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி போன் மாணிக்கவேல் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் சென்னை உய்ரநீதிமன்றம் அளித்துள்ள அதிரடி உத்தரவில்., சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்துள்ளது.

மேலும், ஐஜி பொன்.மாணிக்கவேல் பணியினை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.

பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமனம் செய்து, பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல்

தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் – உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் அதிரடி வேட்டை..! பொன் மாணிக்கவேல் மீட்ட முக்கியமான சிலைகளின் விவரம்..!

படம் – News7Tamil

 

Facebook Comments