பொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் ! அதிர்ச்சியில் போலீசார் ! தொடரும் மர்மம் !

Advertisement

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது.

இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.

10 க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 4 மணிக்கு அந்த பண்ணை வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டி கிடந்தது.

இதையடுத்து போலீசார் பண்ைண வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும், வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகள் வாங்கி வைத்திருந்தனர். வீட்டை சுற்றிலும் ஏராளமான ஆணுறைகள் கிடந்துள்ளன.

இதற்கிடையில், சோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கேட்டபோது, இது வழக்கமான சோதனை தான்,

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இது குறித்து ஏதும் சொல்ல முடியாது என்றார்.

இதே போல் திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சதீஸ் என்பவருடைய தந்தை பொள்ளாச்சி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

அந்த கடையிலும் போலீசார் சோதனையிட்டனர்.

பணம் பறிப்பு …

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சபரிராஜன்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார்.

பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி, அந்த மாணவியை ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவரை நம்பி வந்து, கார் ஒன்றில் ஏறியுள்ளார்.

அதில் சபரிராஜனின் நண்பர்கள் திருநாவுக்கரசு(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27) ஆகியோர் காத்திருந்தனர்.

கார் சிறிது தூரம் சென்ற உடன், சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

இதை சதீஷ் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இதனால் மாணவி கூச்சலிட்டதால், அவரிடம் இருந்த நகை, பணத்தைப் பறித்து கொண்டனர்.

இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால், ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என்று கூறி காரில் இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் அந்த மாணவி கூறியுள்ளார். உடனே பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் புகாரளித்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் செந்தில்(33), பாபு(26), ஆச்சிபட்டி வசந்தகுமார்(26), ஜோதி நகர் பார் நாகராஜ்(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பதியில் இருந்து மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்த போது,

தனிப்படை போலீசார் திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரின் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாறி, தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உண்மை என்ன? இதோ ஆதாரம்… Pollachi Issue | Bar Nagaraj | Sathish | Thirunavukarasu

 

 

Facebook Comments