இலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு!

Advertisement
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ் அமைப்பின் போர்வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்குவைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில், ISIS பயங்கரவாதிகளே உள்ளனர் – பூஜித் ஜய­சுந்­தர

 

நாட்டில் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்­புக்­களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களே உள்­ள­தாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்ளார்.
 
சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நேற்று கட்சித் தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர கலந்­து­கொண்டு தற்போ­தைய நாட்டு நிலை­வரம் தொடர்பில் விளக்க­ம­ளித்­துள்ளார். 
 
இதன்­போதே இந்த குண்­டு­ வெ­டிப்­புக்­களின் பின்­ன­ணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களே சம்­பந்­தப்­பட்­டுள்­ளனர். இது விசா­ர­ணை­க­ளி­லி­ருந்தே தெரி­ய­வந்­துள்­ளது என்று பொலிஸ்மா அதிபர் எடுத்­துக்­ கூ­றி­யி­ருக்­கின்றார்.
 
கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இடம்­பெற்ற விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ருமான மனோ கணேசன்,குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உள்­ளமை உறுதிப்படுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ்மா அதிபர் கட்சித்தலைவர்கள் கூட்­டத்தில் உறு­தி­பட தெரி­வித்தார்.
 
இத்­த­கைய தாக்­கு­தல்­களை இல்லாதொழிப்பதற்கும் குற்றவாளிகளை கைதுசெய்வதற்கும் நடவடக்கை எடுக்கப்படுமென்றும் அவர் உறுதி தெரிவித்தார் என்றார்.

 

Facebook Comments