பிக் பாஸ் 3 தர்ஷனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

Advertisement

பிக்பாஸில் போட்டியில் முக்கிய போட்டியாளரக இருந்த தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் . அவர் போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் திடீரெனெ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தநிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறியது பிக் பாஸ் மீது சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தர்ஷனுக்கு தற்போது முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.


கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம் தான் தர்ஷனை வைத்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

பிக் பாஸ்ஸில் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறினாலும் அவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Facebook Comments
Total Page Visits: 7 - Today Page Visits: 5