103 வயதில் கொரோனாவை வென்று கெத்தாக வீடு திரும்பிய பாட்டியின் புகைப்படம்

Advertisement

ஈரானில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 103 வயது பாட்டியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. 17,361 பேருக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு தீவர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 103 வயது பாட்டி, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் செம்னான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 103 வயதான காவர் அஹ்மதி குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் என செம்னன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது கொவிட்-19 வைரஸிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கும் 103 வயதான காவர் அஹ்மதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

மேலதிக இணைப்பு

1- வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்

2- இலங்கையில் Covid 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு. இன்று பி.ப 2.45 மணியளவில் 3 பேர் அடையாளம் காணப்பட்டன

3- அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Facebook Comments