தமிழரின் பெருமையை படு வேகமாக பரப்பிய கோரோனா வைரஸ்! மகிழ்ச்சியில் மூழ்கிய தமிழர்கள்.!

தமிழரின் வணக்கம் தெரிவிக்கும் முறைதான் உண்மையாக ஒருவருடைய மனதிலிருந்து அன்பையும் மரியாதையையும் எதிரிலிருப்பவருக்கு தெரிவிக்கும் முறை என்பதை கோரோனா வைரஸ் உலகுக்கு தெரிவித்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

இன்று பக்கத்தில் நின்று யாராவது சற்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, சுற்றிலும் உள்ள அனைவருமே சற்று உஷராகி பின்வாங்கி விடுகிறார்கள்.

எங்கே அவரிடமிருந்து நோ ய் தொ ற்று நமக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சி பீதியாகி, பேதியாகி அலறித் துடிக்கிறார்கள்.

அந்த அளவுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிர் கிருமியான கொ ரோனா வை ரஸ் உலகம் முழுவதும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.

கூடுமானவரை மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தடை போட்டுவிட்டன. அனைவரும் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொண்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

அவசியம் இருந்தால் மட்டுமே முகத்தை மூடிக்கொண்டு வெளியில் நடமாடுகின்றனர்.

பொது இடங்களில் யாராவது தெரிந்தவர்கள் வந்தால் கூட, பார்த்தும் பார்க்காமல் தான் சென்றுவிடுகின்றனர்.

இன்றைக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு கொ ரோனா வை ரஸ் கிருமி, யாரையுமே கிட்டத்தில் நெருங்க விடாமல் தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது.

பெரிய மனிதர்கள் சந்தித்துக்கொண்டால் கூட, கை குலுக்கி கட்டிப்பிடிக்காமல், மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்க நம்முடைய தமிழர்களின் நாகரிகமான கை கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொள்கின்றனர்.

எங்கே நாம் அவர்களை கட்டிப்பிடித்தாலோ, அல்லது கை குலுக்கினாலோ கொரோனா வைரஸ் நம்மையும் தொற்றிக் கொள்ளுமே என்ற அச்சத்தினாலேயே இப்படி தம்முடைய மரியாதையை பரிமாறிக் கொள்கின்றனர்.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க அதிபரே சமீபத்தில் தன்னை சந்தித்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கருக்கு

முதலில் தமிழர்களின் மரியாதை முறையான இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

தன்னை சந்திக்கும் நபர்களை கட்டிப்பிடித்து கை நோகும் வரை கைகுலுக்கி வரவேற்பதில் பெயர் பெற்றவர் ட்ரம்ப்.

அவரே தற்போது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார். கேட்டால், இது தான் மிக எளிதான பாதுகாப்பான அணுகுமுறை.

மேலும் நான் இப்போது தான் இந்தியாவிலிருந்து திரும்பியிருக்கிறேன். அங்கு யாரும் கைகுலுக்குவதில்லை.

நானும் கூட அங்கு யாருக்கும் கைகொடுத்து கைகுலுக்கவில்லை.அது மிகவும் நல்ல அணுகுமுறையும் கூட என்று கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர்

முந்திக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் ட்ரம்புக்கு முன்பே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தன்னுடைய நாட்டு மக்கள் கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்படி செய்தால், மக்களிடையே நட்பு மலரும் என்பதோடு, கொ ரோனா வை ரஸ் கிருமியையும் கட்டுப்படுத்தும் என்று சொல்லியிருக்கிறார்.

அதே போல், ஃபிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அதிபர் மேக்ரான் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா சென்றபோது அங்கு கண்டறிந்த கலாச்சாரம் வணக்கம் தெரிவிக்கும் பண்பாடு.

அந்த பண்பாட்டை நம் நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார், என்று குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் சார்லஸின் வணக்கம் அவரைப் பின்பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸும் கைகூப்பி வணக்கம் தெரிவிப்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடந்த இளவரசர் அறக்கட்டளை நடத்திய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்த மாண்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது எனலாம்.

எது எப்படியோ, ஒரு கண்ணுக்கு தெரியாத வை ரஸ் கிருமி வந்து உலக மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரத்தை மதிக்க கற்றுக்கொடுத்துவிட்டது.

இப்போதாவது தெரிகிறதே, தமிழன் காட்டுமிராண்டி கிடையாது, நாகரீகம் தெரியாதவன் கிடையாது, பண்பாடு தெரியாதவன்.

 

Total Page Visits: 108 - Today Page Visits: 3