கொரோனா வைரசுக்கு பயந்து பசு மாட்டு கோமியம் குடித்தவர் ஆபத்தான நிலையில் ! பா.ஜ.க நிர்வாகி அதிரடி கைது !

Advertisement

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று மாட்டு கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.

அவர் வழங்கிய கோமியத்தை ஒருவர் வாங்கி குடித்துள்ளார். கோமியம் குடித்தவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாட்டு கோமியம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகி நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் சாயன்டன் பாசு,

‘நாராயண் சட்டர்ஜி, பசு கோமியம் என்று கூறியே அதனை வழங்கியுள்ளார்.
மக்கள் யாரையும் அவர் ஏமாற்றவில்லை.

யாரையும் அவர் கட்டாயப்படுத்தி குடிக்கச் சொல்லவில்லை. பசு கோமியம் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று இதுவரையில் நிரூபணம் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

பசு மாட்டு கோமியம் 1 லிட்டர் ரூ.500!

பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து கொரோனா நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து வினோதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வலே மும்பையில் ஒரு ‘கோ கொரோனா கோ’ கோஷத்தை வழிநடத்தினார், இது கொரோனாவை எவ்வாறு அகற்றும் என் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

மேலும், அசாம் பாஜக எம்.எல்.ஏசுமன் ஹரிப்ரியா, மாட்டு கோமியம் மற்றும் சாணத்தை கொரோனா வைரசை குணப்படுத்த உதவக்கூடும் என்று கூறினார்.

அதே போல் அகில இந்திய இந்து மகாசபா கொரோனாவை தடுக்கும் பொருட்டு டெல்லியில் ஒரு மாட்டு கோமியம் விருந்தை நடத்தியது.

சமீபத்தில் சில அமைப்பினர் கொரோனாவுக்கு மருந்தாக கோமியத்தை கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கொரோனா அண்டாது என்றும் கூறினர்.

கொரோனா வைரஸை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர்.

கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச்சாணத்தையும் கொரோனா வைரஸ் பரபரப்பை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

தனது இரண்டு மாடுகளின் கோமியத்தை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 500-க்கும் மாட்டுச்சாணத்தை கிலோ ரூபாய் 500-க்கும் விற்பனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க பலர் தன்னிடம் கோமியம், மாட்டுச்சாணத்தை வாங்கிச் செல்வதாகவும் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொரோனா வைரஸை குணமாக்கும் என்று எந்த ஆய்வறிக்கையும் கூறாத நிலையில் தற்போது மக்கள் இவ்வாறு வாங்கிச் சென்று கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Facebook Comments