இத்தாலியில் தொடரும் சோகம்..! கொரோனாவால் ஒரே நாளில் 800 பேர் மரணம் ! மயானமாகும் இத்தாலி நகரங்கள் !

சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.

இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4825ஆக உயர்ந்துள்ளது. இதில் லொம்பாடி என்ற இடத்தில் மாத்திரம் 3095 பேர் வரை மரணமாகியுள்ளனர்.

இதனையடுத்து லொம்பாடியில் கடுமையான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அனைத்து வெளியக செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது.

முழுமையாக இத்தாலிய மக்கள் அனைவருமே வீடுகளில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் கொரோனா வைரஸினால் 1326 பேர் மரணமாகியுள்ளனர்.

46 மில்லியன் மக்கள் முழுமையான அடைப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸினால் 562பேர் மரணமாகினர்.

இத்தாலி

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் அதிக உயிரிழப்பு என்கிறார்கள்.. உண்மையில் சீனாவை விட இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், சீனாவின் ஊஹானை சேர்ந்தவர்கள் இத்தாலியில் நிறைய பேர் வேலை பார்த்து வருவதால், அவர்கள் மூலமாக இந்த வைரஸ் ஊடுருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அதேபோல அடக்கம் ஒடுக்கமாக இல்லாமல் படு கவனக்குறைவாக இருந்ததும் இன்னொரு முக்கியக் காரணம்.

ஒரே நாளில் மட்டும் 475 பேர் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளது மிகப்பெரிய கொடுமையாகும்..

இப்போது வரை இத்தாலியில் 41, 506 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்… 3, 405 பேர் உயிரிழந்துள்ளனர்… 4,025 பேர் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளனர்.

உயிரிழப்புகள்தான் இப்படி என்றால் சடலங்களை அடக்கம் செய்வது அதைவிட பெரிய பிரச்சனையாக உள்ளது .

இத்தாலியின் உள்ள பெர்காமோ என்ற நகரம்தான் அந்நாட்டிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது..

அங்கிருக்கும் சுடுகாடுகளே திணறும் அளவுக்கு தினமும் ஏராளமான உடல்கள் வந்து குவிகின்றன.

சராசரியாக ஒருநாளைக்கு குறைந்தது 93 பேர் அந்த நகரத்தில் மட்டும் இறப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன… “கொரோனா வைரஸ் தன்னை பாதித்துள்ளது என தெரியாமலேயே எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர்…

அதை கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த உயிரிழப்பு என்பது உண்மையான எண்ணிக்கையைவிட அதிகம் இருக்கும்” என்று பெர்காமோ நகர மேயர் கோரி தெரிவிக்கிறார்.

சடலங்கள்

அந்நகரில் உள்ள சுடுகாடு 24 மணி நேரமும் இயங்கி வருகிறதாம்.. ஆனாலும் ஒரு நாளைக்கு 25 சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்ற நிலை உள்ளது..

இதனால் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. இதன்காரணமாக சடலங்களை பக்கத்து நகரங்களில் உள்ள சுடுகாட்டில் எரிக்க, அந்த சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன… இந்த பணிக்காக ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை

இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன…

சுடுகாட்டில் இந்த பிரச்சனை என்றால், ஆஸ்பத்திரிகளில் இதைவிட மோசமான நிலை உள்ளது.. போதுமான அளவுக்கு படுக்கைகள் இல்லையாம்..

இதனால் 80 முதல் 95 வயது வரை உள்ள வயசானவர்கள், சுவாசக்கோளாறு பாதிப்புடையவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற ஷாக் தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

இந்த சமயத்தில்தான் இத்தாலியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீனா களமிறங்கி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சீன மருத்துவர்களுக்கு அனுபவம் இருப்பதால் அங்கிருந்து ஸ்பெஷல் டாக்டர்கள், மருத்துவ உபகரணங்களும் சீனாவில் இருந்து களமிறங்கி உள்ளன…

கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று இத்தாலிய அமைச்சர் லூய்கி டிஐ மாயோ அச்சம் வெளிப்படுத்தி உள்ளார்.

சீனா செய்வது கண்டிப்பாக இத்தாலிக்கு மிகப்பெரிய உதவிதான்.. நிறைய நம்பிக்கையை ஏற்படுத்தவும் கூடியது..

10,000 வெண்டிலேட்டர்கள், 20 லட்சம் மாஸ்க்குகள், 20,000 ஆயிரம் பாதுகாப்பு சூட்கள், இதை தவிர மருத்துவ உதவிகள் போன்றவைகளை இத்தாலிக்கு தந்து உதவ சீன அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது.

அதனால் எப்படியோ கூடிய சீக்கிரம் இத்தாலியில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேதனையை சொல்லி மாள முடியாது என்று இத்தாலியர்கள் மனசுக்குள் அழுது கொண்டுள்ளனர்.

நேற்று வரை நம் பாசத்துக்குரியவராக இருந்தவர் இன்று திடீரென இறந்து போனால் மனசுக்கு யார்தான் ஆறுதல் சொல்வது?

இந்த வேதனைக்கு எப்போது முடிவு? என்று இந்த கொரோனா துயரம் ஓயும்? என்ற பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது இத்தாலி..

எங்கெங்கும் நீடித்து வெடித்து கிளம்பும் அந்த அழுகை ஒலிக்கு ஆறுதல் சொல்ல உலகத்தில் எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.

Italy coronavirus death toll rises by 800 to 4,825

Total Page Visits: 188 - Today Page Visits: 2