நீடிக்கும் ஊரடங்கு சட்டம் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கொரோனா அச்சுறுதலை அடுத்து நாடுமுழுமையிலும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படும் என்றும் 6மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோல ஏனைய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் 23ஆம் திகதி காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு 24 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக இணைப்பு

1- கொழும்பு, கம்பஹா, புத்தளம் தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு திங்கள் கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் & அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்:

2- COVID -19 அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு, கம்பாஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்:

3- 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் ஊரடங்கு உத்தரவு மீறி பயணம் செய்த 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

4- இலங்கையில் Covid19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு

 

அனுராதபுர மருத்துவமனையில் மேலும் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

5- முக்கிய அறிவித்தல் – வட மாகாண ஆளுநரிடமிருந்து..

யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில்கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள்.

 

 

அன்றைய தினம் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த ஒருவரால் போதனை நடத்தப்பட்டது.அதன் பின்னர் அவர் ஒரு கொரோனா தொற்றாளர் என இனங்காணப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேபோன்று ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.

குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212227278)

உடனடியாக தொடர்புகொண்டு தங்களது விபரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும்

நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும் என்றும்

 

இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் இந்த வேளையில் அவசியமாகிறது.

மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்படியும் கோரப்பட்டுள்ளது. –

 

வடமாகாண ஆளுனர்.

Total Page Visits: 278 - Today Page Visits: 3