21 வயது மகளைப் பறிகொடுத்தேன்: நொறுங்கும் பிரித்தானிய தாயார்!

உடல் நிலையில் எந்த பிரச்னையும் இல்லாத இளம் பெண் ஒருவர் திடீரென்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளசம்பவம் அவரது குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் குடும்பத்தாருடன் குடியிருந்து வந்த 21 வயது Chloe Middleton என்பவரே கொரோனாவுக்கு பலியான இளம்வயது நபர்களில் ஒருவர்.

மருத்துவ ரீதியாக எவ்வித பிரச்னையும் இல்லாதவர் Chloe Middleton. இருப்பினும், திடீரென்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளது அவரது மொத்த குடும்பத்தாரையும் உலுக்கியுள்ளது.

அவரது தாயார் டயான் மிடில்டன் தமது பேஸ்புக் பக்கத்தில், மகளின் இழப்பு தொடர்பில் உருக்கமான பதிவை பகிர்ந்து கொண்டு,

எஞ்சிய பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது வெறும் காய்ச்சல் என உதாசீனம் வேண்டாம், எனது சொந்த அனுபவத்தில் இருந்து பேசுகிறேன், கண்டிப்பாக பாதுகாப்பாக இருங்கள், எனது 21 வயது மகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பறிக்கொடுத்துள்ளேன்.

மருத்துவ ரீதியாக எந்த பிரச்னையும் இல்லாத எனது மகள், தற்போது உயிருடன் இல்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் மரணமடைந்துள்ள அனைவரும் முன்னரே மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தவர்கள் என NHS சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Chloe Middleton-ன் மறைவு அவரது தாயார் மற்றும் உறவினர்களை மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் பொதுமக்களில் சிலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது.

Chloe Middleton-ன் தாயார் கூறிய கருத்துக்களையே அவரது உறவினரும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், அரசு முன்வைக்கும் கோரிக்கைகளை இந்த விவகாரம் தொடர்பில் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Total Page Visits: 73 - Today Page Visits: 2