இத்தாலியில் கொரோனாவின் கொடூரம் ! இது வரை 100 டாக்டர்கள் உயிரிழப்பு !

இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதம் கரோனா நோய்த்தொற்று (கொவைட் -19) பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 100 மருத்துவர்கள் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவலை இத்தாலியின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் இத்தாலியில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உலக
இத்தாலியில் நோய்த்தொற்றுக்கு இதுவரை 14 லட்சத்து 36 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 28 ஆயிரத்து 470 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 100 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும்,

இதில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் அடங்குவர் என இத்தாலியின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் 30 செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவி பணியாளர்களும் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது.

ஏப்ரல் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளை எவ்வாறு, எப்போது எளிதாக்குவது என்பது குறித்து இத்தாலி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

உலகளவில் பாதிப்பு 15 லட்சத்தைக் கடந்தது !!

கொரோனா வைரஸின் கோரப்பிடி உலகச் சமூகத்தை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது, உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்து 15 லட்சத்து 17 ஆயிரத்து 95 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை 88 ஆயிரத்து 441 பேராக அதிகரித்துள்ளது.

அதேசமயம் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.30 லட்சத்தை நெருங்குகிறது

அதில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான். குறிப்பாக அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக உயிரிழப்புகள் மிக மோசமாக அதிகரித்து இரு நாட்களுமே ஏறக்குறைய நாள்தோறும் 2 ஆயிரம் பேர்வரை உயிரிழந்துள்ளர்கள்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 774 பேராக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏறக்குைறய 22 ஆயிரம் பேர் கரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் நற்று ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிகமானோர் கரோனா வைரஸால் பலியாகியுள்ளார்கள். ஸ்ெபயினில் இதுவரை 14 ஆயிரத்து792 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 48 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

இத்தாலிதான் உலகிலேயே அதிகமான உயிரிழப்பை கரோனா வைரஸால் சந்தித்துள்ளது.இத்தாலியில் இதுவரை 17,669 பேர் உயிரிழந்துள்ளனர், நேற்றுகூட 542 ேபர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இத்தாலியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரமாக இருக்கிறது

Total Page Visits: 989 - Today Page Visits: 1