விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ! எரிந்து சாம்பாலான 3,500 வாடகை கார்கள் !

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்து ஐநூறிற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இத்தாலியை விட அமெரிக்காவில் அதிகரிப்பு!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு, இப்போது அமெரிக்கா அதிக விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உலகில் சர்வ வல்லமை பெற்று விளங்கும் அமெரிக்காவை, கடந்த சில நாட்களாக கொரோனா உலுக்கி எடுக்கிறது. விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அந்த நாடு, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,05,237 ஆக உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிகை 19,666 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

கொரோனாவால் மிகக்கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்ட இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,468 ஆக உள்ளது. இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயினில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் தற்போதைய நிலவரப்படி 16,353 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Total Page Visits: 4325 - Today Page Visits: 2