ஒரே நாளில் கொரோனாவினால் பிரிட்டன் – இத்தாலியில் 1075 பேர் பலி !

பிரிட்டனில் 439 பேர் பலி மற்றும் இத்தாலி நாட்டில் 636 பேர் பலி .மேலும் கொரோனாவால் 51,608 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

பிரிட்டனில் இன்று திங்கள் கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் படி 439 பேர் பலியாகியுள்ளனர்,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 5,373 ஆகும்.

மொத்த பாதிப்பு 51,608 ஆக உயர்வடைந்துள்ளது , இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பிரிட்டன் அதிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

மேலும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது . மேலும் இத்தாலியில் 636 பேர் பலியாகியுள்ளனர் ,16.523 பேர் இதுவரை இறந்துள்ளனர் .


பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜோன்சன் கோரனோ நோயல் பாதிக்க பட்டு கடந்த தினம் இரவு St Thomas’s மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் .

அன்றில் இருந்து இதுவரை அவர் ஆபத்தான நிலையில் உள்ளதா கவும் ,அவருக்கு ஓட்ஸிசன் வழங்க பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது சிறந்த ஒரு தலைவரை மீள் உடல் நலத்துடன் பெற்று விட வேண்டும் என மக்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் ஒரு பிரித்தானியா செய்தி இணைப்பு !

பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் சேவையில் உள்ள பயணிகள் சாரதிகளாக பணியாற்றிய எட்டு சாரதிகள் கடந்த சில நாட்களில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மேலும் இது நிலக்கீழ் சுரங்க ரயில்வேயில் பணியாற்றிய ஊழியர்களும் பலியாகியுள்ளதாக லண்டன் மேயர் சாயிக்கான் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.

பயணிகள் பேருந்துகளை நாள் தோறும் மக்கள் பாவித்து வருகின்றனர் . அவ்வாறான பயணிகள் ஊடாக இந்த நோயானது அவர்களை தொற்றி பலியாகியுள்ளனர் .

Total Page Visits: 2319 - Today Page Visits: 1