கொரனோ தொற்றலின் புதிய அறிகுறி இது தானாம் ! அமெரிக்க மருத்துவர்கள் தகவல் ….

கொரனோவின் புதிய அறிகுறி கண்டு பிடிப்பு – இது உங்களுக்கு இருக்கிறதா ..?உலக மக்களை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் புதிய அறிகுறி இப்பொழுது கண்டுபிடிக்கபட்டுள்ளது கால்களில் ஊதா, அல்லது நீல நிறமாக இருந்தால் அது கொரனோ அறிகுறி என அமெரிக்கா தொற்று நோய் மருத்துவ ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அது தவிர கால்களில் ,ஏழு முதல் பத்து நாட்கள் தொடராக வலி இருந்தால் அவை இதற்கான முன் அறிகுறி என இப்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது இவ்வாறான அறிகுறி இருந்தால் இது உங்களுக்கு இந்த நோயானது உள்ளது என்பதாகும் ,அவ்விதம் இருந்தாலே உடனே மருத்துவரை நாடுங்கள் ,அல்லது நோய் எதிர்ப்பு உணவுகளை உட்கொள்ளுங்கள் ,உறங்கும் பொழுது குப்புற படுத்து மூச்சை நன்றாக மேலும் கீழுமாக பெரும் மூச்சாக நாள் ஒன்றுக்கு முப்பது தடவை இழுத்து விடுங்கள் ,

அவ்வாறு செய்கின்ற பொழுது நுரையீஈரல் பகுதிகளில் உள்ள நோயின் தொற்று கிருமிகள் அழிந்து விடும் என தெரிவிக்கபடுகிறது ,மேலும் சூடான பானங்கள் அடிக்கடி அருந்துங்கள்

இந்த கொரனோ அச்சம் முடியும் வரையாவது இதனை,கண்டிப்பாக , கடைப் பிடியுங்கள் மக்களே . கொடிய நோயில் இருந்து எம்மை நாமே தற்காத்து கொள்ள இவற்றை பின்பற்றுவோம் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் , உங்கள் நண்பர்களுக்கும் இதை , தெரிய படுத்தி அவர்களையும் காப்பாற்றி கொள்ள இதனை பகிருங்கள் உறவுகளே .

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டது!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடர்பான விடயங்களை மதிப்பிட்டுவரும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளவில், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2.88 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை காண்பிக்கின்றது.

அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் சுமார் 813,000பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

காற்று மாசுத் துகள்கள் மூலம் நீண்ட தூரத்திற்கு பரவும் கொரோனா? விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

இயல்பாக காற்றில் கலந்துள்ள மாசுத்துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் நீண்ட தூரத்திற்கு பயணிக்கக் கூடும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் காற்று மாசுத்துகள்களில் கொரோனா வைரஸ் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் வைரஸ் எவ்வளவு தூரத்திற்கு பயணிக்க கூடும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் தி கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த வைரஸ் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இந்த வைரஸின் தன்மை என்ன? இது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் இதை கட்டுப்படுத்துவதற்கு வழி என்ன? என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த வைரஸ்கள் காற்றில் மிக வேகமாக பரவக்கூடியது எனவும் பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இத்தாலி நாட்டின் போலோக்னா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் காற்றில் பரவுவது குறித்த தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதில் தெற்கு இத்தாலியின் பெர்கமோ மாகாணத்தில் ஒரு நகர்ப்புற மற்றும் ஒரு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் வெளிப்புற காற்று மாசு மாதிரிகளை சேகரித்து ஆராய்ந்ததில் அதில் கொரோனா வைரஸ் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.

அந்த ஆய்வுக்குழுவுக்கு தலைமை தாங்கிய இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தின் லியோனார்டோ செட்டி, காற்று மாசுபாட்டின் மூலம் வைரஸ்கள் நீண்ட தூரத்திற்கு பயணிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் இப்போது எழுந்துள்ளது என கூறியுள்ளார். தான் ஒரு விஞ்ஞானி ஆக இருந்தும் இது பற்றிய தரவுகள் தனக்கு தெரியவில்லை என்பது கவலை அளிக்கிறது. இது பற்றி நமக்கு தெரிந்தால் தான் இதற்கு ஒரு தீர்வு காண முடியும். இல்லாவிட்டால் அதன் பலன்களை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார் .

ஆனால் இதற்கு முன்பாக இதே போன்ற காற்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரண்டு குழுக்கள் கொரோனா காற்று மாசுத் துகள்கள் மூலம் காற்றின் நீண்ட தூரத்திற்கு பயணிக்க முடிகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி கூறும் லியோனார்டோவின் குழுவினர்,

ஊரடங்குக்கு முன்னர் வடக்கு இத்தாலியில் ஏற்பட்ட அதிக அளவு மாசுபாடு அதிக நோய்த் தொற்றுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஐரோப்பாவிலேயே மிகவும் மாசுபட்ட பகுதியாக இது இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த விஞ்ஞானக் குழுவும் இதை முறையாக பகுப்பாய்வு செய்யவில்லை. ஆனாலும் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பது அனைத்து வல்லுனர்களும் ஒப்புக் கொள்கின்றனர் என்கிறார்.

காற்று மாசுக்கள் வைரஸை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது சாத்தியம். ஆனால் கொரோனா வைரஸ் எந்த அளவிற்கு பரவுகிறது என்பது கேள்வியாக உள்ளது. ஆனால் விரைவில் இதற்கான ஆய்வு முடிவுகள் வெளிவரும்.

இருமல் மற்றும் தும்மல்களிலிருந்து பெரிய வைரஸ் நீர்த்துளிகள் காற்றில் கலந்த கொஞ்ச தூரத்திலேயே அழிந்து விடக்கூடும். ஆனால் சில நேரங்களில் காற்று மாசுவில் கலந்த வைரஸ் கிருமிகள் பல மீட்டர் தூரத்திற்கு முன்னேறவும் செய்கிறது என்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் காற்று மாசு ஆராய்ச்சியாளருமான ஜொனாதன் ரீட், வைரஸ் நீர்த்துளிகள் காற்றில் சில நிமிடங்களில் அழிந்தாலும், மாசுத் துகள்களுடன் ஒன்றிணைந்து காற்றில் கொஞ்ச தூரத்திற்கு பயணிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை என கூறியுள்ளார். அத்துடன் சீனாவில் ஒரு பூட்டப்பட்ட வீட்டிற்குள் எடுக்கப்பட்ட காற்று மாசு துகள்களில் கொரோனா வைரஸ் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நாளும் இன்னபல காரணிகளால் தான் கொரோனா பரவுகிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தி இருந்தது. போகிற போக்கை பார்த்தால் நாங்கள் “கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார்” என சின்ன வயதில் படித்திருப்போம். அப்படியாக காற்று மாசுக்கள் பரவும் எல்லா இடங்களிலும், மாசுக்கள் ஒட்டியிருக்கும் எல்லா இடங்களிலும் கொரோனா கிருமி இருக்க வாய்ப்புள்ளதா? என்பது தான் இப்போதுள்ள பெரும் கேள்வியாகும்.

காற்று மாசுக்கள் பயணிக்கின்ற இடங்களில் கொரோனா இருக்கலாம் என்கிற சந்தேகத்துக்கு விஞ்ஞானிகள் விரைவில் தீர்க்கமான விடை தர வேண்டும்.

Total Page Visits: 4040 - Today Page Visits: 2