கடலுக்குள் வாழும் 8 மீட்டர் நீளமான பிரமாண்ட கடற் புழு ! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள் !

நியூசிலாந்து கடல் ஆய்வாளர்கள் ஸடீவ் ஹாத்வே , அன்ரூ பட்லே ஆகியோர் எரிமலையால் தோன்றிய வெள்ளைத் தீவுப் பகுதி கடற்பரப்பில் நீருக்குள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது ,மிகவும் பிரம்மாண்ட அளவுடைய இராட்சத கடற் புழு ஒன்றைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். வள்ளை நிறத்தில் வழுவழுப்பாக காணப்பட்ட அதன் தலைப் பகுதி தட்டையாக முட்கள் போன்ற அமைப்புடன் காணப்பட்டுள்ளது.

அப் புழு தண்ணீரில் நடுங்கியபடி சுழன்ற காட்சியை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற ஓர் உயிரினம் உள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிடும் அவர்கள் இது ஜெலிபிஸ் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.


67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி !

பெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வெறும் பெப்சி குளிர்பானத்தை மட்டுமே குடித்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jackie Page என்ற பாட்டிக்கு தற்போது 77 வயதாகிறது. 4 பிள்ளைகளுக்கு தாயான இவர், 1954 ஆம் ஆண்டு தனது 13 வயதில் பெப்சி குடிக்க ஆரம்பித்துள்ளார்.

பெப்சி குடிப்பதை வழக்கமாக்கி கொண்ட இவர், தண்ணீர் மற்றும் பால் குடிப்பதை நிறுத்திவிட்டார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் தண்ணீர் குடிப்பது இல்லை.

இதுகுறித்து Jackie Page கூறியதாவது, பல ஆண்டுகளாக பெப்சி குடித்து வருவதால் எனது உடலில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படவில்லை. நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன். மேலும், நல்ல பிட்டாகவும் இருக்கிறேன்.

பெப்சி குடிப்பதால், பற்கள் அசுத்தமாகும் என கூறுவார்கள். ஆனால் எனது பற்களில் எவ்வித பிரச்சனையும் இல்லை. சாப்பிட்டு முடித்தவுடன் கூட தண்ணீர் குடிக்கமாட்டேன்.

டீ, காபி குடிப்பதை கூட நான் விரும்பமாட்டேன் என கூறியுள்ளார்.

Total Page Visits: 3243 - Today Page Visits: 1