இலத்தீன் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வீதிகளில் வீசும் அவலம் ! தடுமாறும் அரசு !

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள துறைமுக நாடுகளில் ஒன்றான ஈகுவெடார் நாட்டில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை அங்கு வைரஸ் தொற்றால் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிகிச்சைப் பலனின்றி 360பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடலோரா மாகாணமான குயாஸில் உள்ள குயாகுவில் நகரத்தை சேரந்தவர்கள். இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 வாரங்களாக மக்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு  நகரப்பகுதியில் கடந்த சில தினங்களாக உயிரிழந்தவர்களில் உடல்கள் தகனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. 


இந்நிலையில் நகரம் முழுவதும் கடந்த 3 வாரங்களாக அடக்கம் செய்ய முடியாமல் வீடுகள் மருத்துவமனை மற்றும் தெருக்களில் வீசப்பட்ட 800க்கும் அதிகமானோரில் உடல்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்து தெரிவித்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், குயாகுவில் உள்ள  குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அடக்கம் செய்ய உதவி கேட்கும் செய்திகளுடன், தெருக்களில் கைவிடப்பட்ட உடல்களின் வீடியோக்களையும்  சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து குயாகுவில் உள்ள வீடுகளில் இருந்த 771 உடல்களும் மருத்துவமனைகளில் இருந்த 631 உடல்களும் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். இதனிடையே அங்கு இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாததுக்கு பொதுமக்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததே காரணம் என்ற பரவலான கருத்தும் உலா வரதொடங்கியுள்ளது. மற்றொருபுறம் கொரோனா தொற்று குறித்து அச்சம் தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள், இம்மாத இறுதிக்குள் ஈகுவெடாரில் கொரோனாவால் 2500 முதல் 3500பேர் வரை உயிரிழக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

Total Page Visits: 2377 - Today Page Visits: 1