பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா நிலவரம் என்ன ? அரசின் அடுத்த நடவடிக்கை இதுதானாம் …!!

பிரான்சில் பொதுமுடக்கம் 40வது நாளினை எட்டியுள்ள இன்றயை நாளின் சுகாதார அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 1 101 பேர் குணமடைந்துள்ளதோடு, 369 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை உயிரிழப்புக்கள் பெருமளவு குறைந்துள்ள நிலையில், 198பேர் மருத்துமனைகளிலும், 171 பேர் மூதாளர் இல்லங்கள், சமூக மையங்களில் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக 1 537 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தற்போது 28 222 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில் 4 725 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இதுவரை 124 114 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, இவர்களில் 87 524 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 594 பேர் குணமடைந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 614ஆக உயர்வடைந்துள்ளது.

27 880 பேர் மூதாளர்கள் பாதிப்பு ! இதுவரை 8 393 பேர் உயிரிழப்பு !!

கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று பெரிதும் மூதாளர்களையே பலியெடுத்து வரும் நிலையில், பிரான்சில் 27 880 மூதாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, இதுவரை 8 393 பேர் உயரிழந்துள்ளளர். பிரான்சில் அண்ணளவாக 7 500 மூதாளர் இல்லங்கள் உள்ள நிலையில், இதில் 45 வீதமான இல்லங்களுக்குள் கொரோனா புகுந்துள்ளது.

இது தவிர வீடுகளில், சமூகமையங்களில் இன்றும் ஒரு தொகுதி மூதாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மூதாளர் இல்லங்களுக்கான சுகாதார உபகரணங்கள் முன்னராக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருவதோடு, ஒவ்வொரு நகரசபைகளும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

மூதாளர் இல்ல உயிரிழப்புக்கள் குறித்த வெள்ளை அறிக்கையொன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரியிருப்பதோடு, பல குடும்பங்கள் தமது மூத்தோர்களின் உயிரிழப்பு எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் மூதாளர் இல்லங்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை முதல் மூதாளர் இல்லங்களுக்கு சென்று உரியகட்டுப்பாடுகளுட்ன் தமது மூத்தோரை சந்திப்பதற்கு உறவுகளுக்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

2003ம் ஆண்டு ஏற்பட்ட கடும்வெப்பம் காரணமாக 15 000 முதியோர்கள் உயிரழந்துள்ளனர் என்பது சுகாதாரத்துறையினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

கொரோனாவின் கைகளில் உணவகங்கள், குடிப்பகங்கள் !!

மே11ம் நாள் பொதுமுடக்கம் நீக்கத்தக்கு பின்னராக பல்வேறு தொழில்நிறுவனங்;களை படிப்படியாக திறக்கதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உணவகங்கள்( Restaurant) , குடிப்பகங்கள் (Bars) எப்போது என்ற கேள்வி எழுந்திருந்தது.

இதற்கு விடைகாணும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை அதிபர் ஏமானுமல் அவர்கள், இத்துறை சார்ந்தவர்களோடு தொடர்பாடல் தொழில்நுட்ப முறையிலான கூட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தார்.

உணவகங்களின் முக்கியத்துவத்தையும் தற்போதைய நெருக்கடியாhன சூழ்நிலையையும் உணரமுடிகிறது என தொடக்கவுரையில் குறிப்பிட்ட அதிபர் ஏமானுவல் மக்ரோன் அவர்கள், ‘பிரெஞ்சு மக்களின் வாழ்க்கைக் கலையை வைரஸ் விரும்பவில்லை’ என்று உணர்வுபூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக வைரஸ் தொற்று எளிதாக பரவுவதற்கு உணவகங்கள், குடிப்பகங்கள் காணப்படுகின்ற நெருக்கம் காரணமாக அமைகின்றதென மருத்துவ விஞ்ஞான ஆய்வறிஞர்களின் கருத்தினை தனதுரையில் அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக உடனடியாக இவைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலை காணப்படுவதனை பலரும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இத்துறைக்கான மேலதிகமான அரசாங்கத்தின் உதவிகள் தொடர்பில் முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.

சுகாதார நிலைமைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து இவைகள் திறக்கப்படுவதற்கான முடிவினை மே மாத இறுதிப்பகுதியில் எடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யூலை நடுப்பகுதி ஓர் இலக்காக இருந்தாலும், அது சாத்தியா என்ற கேள்வியும் பரவலாக காணப்படுகின்றது . எல்லாம் கொரோனாவின் கையில்தான் உள்ளது.

Total Page Visits: 3200 - Today Page Visits: 2