இத்தாலி பிரதமரின் அதிரடி முடிவு ! மே 4 முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு !

இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன் விரிவான அறிக்கை ஞாயிறன்று வெளியானது.

இரண்டு மாத ஊரடங்கிற்குப் பிறகு, மே மாதம் 4 முதல் இத்தாலியில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடத் தொழில்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்கையில் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மிலன் நகருக்கு வெளியே முதன்முதலாக COVID – 19 கண்டறியப்பட்ட சில வாரங்களில் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. இத்தாலியரான நாங்கள் மிகவும் சிக்கலான சவாலை எதிர்கொண்டுள்ளோம். மார்ச் மாதம் முதல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எங்களின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க திட்டங்களை வகுத்துள்ளோம்.

கொரோனா வைரசோடு வாழ்வை எதிர்கொள்ளும் போதும், அதற்கான ஒவ்வொரு தடுப்பு நடவடிக்கைகளையும் முடிந்தவரை செயல்படுத்தி வருகிறோம்.

உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்கள், சில மொத்த வணிக நிறுவனங்கள் மே மாதம் முதல் செயல்படும்.

அதனையடுத்து இருவாரங்களில் சில்லறை வணிகமும் அனுமதிக்கப்படும். ரெஸ்டரென்ட்கள், பார்கள் ஜூன் தொடக்கத்தில் தான் செயல்படும். சாத்தியப்படும் சூழலில் விரைவில் வணிகச் செயல்பாடுகளை தொடங்க உள்ளோம்.

மீண்டும் திறக்கப்படும் அனைத்து நிறுவனங்களும் அரசு வரையறுத்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தை வலப்படுத்த பல்வகை ஆயத்தப் பணிகள் இந்நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

பூங்காக்கள் இயங்கும். குறைந்த எண்ணிக்கையில் குடும்பத்தினர் வெளியே செல்லலாம். இறுதிச் சடங்கில் 15 பேர் பங்கேற்கலாம். ஆனால் சமய நிகழ்வுகள் அனைத்தின் மீதான தடைகள் நீடிக்கும்.

மக்கள் அனுமதி பெற்ற சான்றுகளுடனே பயணம் செய்ய வேண்டும். மியூசியம் மற்றும் நூலகங்கள் மே 18 முதல் செயல்படும். விளையாட்டு அணிகளும் குழுப் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் கால்பந்து போட்டிகள் தொடர்பான எந்தவொரு முடிவும் நன்கு விவாதித்தே எடுக்கப்படும்.

மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டில் செப்டம்பரில் தொடங்கும். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அரசு பொறுப்பேற்கும்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார வளம்மிக்க மூன்றாம் நாடான இத்தாலியின் நிலை இந்த லாக்டவுனால் சிதைந்து போயுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இத்தாலி எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி இதுவேயாகும்.

இத்தாலிய நிறுவாகத் தலைவர்கள் இந்த கட்டுப்பாட்டு சூழல் அனைத்தையும் மிக மோசமான பொருளாதார அழிவாகக் கருதுகின்றனர்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் COVID -19 க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடரும். அதற்கு அதிக காலம் தேவைப்படாது எனவும் பிரதமர் கொன்ட் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று இத்தாலியின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி கொரோனா இறப்பு விகிதம் 260. இது மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட பலி எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. இதுவரை 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26000 மக்கள் மடித்துள்ளனர்.

இத்தாலியில் தற்போது புதிய கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவசரப் பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து உள்ளது.

இத்தாலி பிற உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் மிக விரைவாக தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மார்ச் முதல் வாரத்திலேயே கடுமையாக ஊரடங்கை நடைமுறை படுத்தியது.

“ஏற்றுமதித் தொடர்புடைய செயல்பாடுகள் இந்த வாரம் முதல் அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் பணியினை விரைந்து செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். வங்கிகளின் நிலையான கையிருப்பு உறுதியாக்கப்படும்.

அரசு தொழில்துறைக்கு முழு அளவில் உதவும். ஆனால் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படும்” என பிரதமரின் அறிக்கை தெளிவு படுத்தியுள்ளது.

ஒருமுறை குணமடைந்தாலும் மீண்டும் வரலாம் கொரோனா: உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கு, இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பான WHO.

எனவே, கொரோனா பாதிப்பில் சிக்கிய “நோய் எதிர்ப்பு பாஸ்போர்ட்” அல்லது “அபாயமற்ற பாஸ்போர்ட்” வழங்குவதில் உலக அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டுமென உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதன்மூலம், வைரஸ் தொற்றில் குணமடைந்தவர்கள், தரப்படும் மருத்துவ ஆலோசனைகளை அலட்சியம் செய்யாமல் முறையாகப் பின்பற்றி, அதன்மூலம் பிறருக்கு பரப்பாமல் அவர்கள் செயலாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், ஒருமுறை வைரஸ் தொற்றி, அதிலிருந்து மீண்டவர்களின் உடலில், தானாகவே எதிர்ப்பு சக்தி உண்டாகியிருக்கும் என்ற மருத்துவக் கருத்தாக்கத்தின்படி, அத்தகையோருக்கு, “நோய் எதிர்ப்பு பாஸ்போர்ட்” அல்லது “அபாயமற்ற பாஸ்போர்ட்” வழங்கப்படுகின்றன.

இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், மீண்டும் பணிக்குத் திரும்பவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பானது, உலக வட்டாரத்தில் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி – patrikai.com

Total Page Visits: 3724 - Today Page Visits: 2