தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது.

thalapathy 65

சென்ற வருடம் இவர் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில், இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

மாநகரம் மற்றும் கைதி வெற்றி பிறகு இயக்குனர் லோகேஷ் நடிகர் விஜய்யுடன் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும், அப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே என இரண்டு ஹீரோயின்கள் நடிப்பார்கள் என கருதப்படுகிறது.

இந்த தகவல்கள் யாவும் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Total Page Visits: 454 - Today Page Visits: 1