உலகளவில் கொரோனாவினால் ஒரே நாளில் 6100 பேர் உயிரிழப்பு …!

உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60, 651 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச நாடுகளை கடந்த 4 மாதங்களாக கொரோனா கொடூரமாக தாக்கி நிலை குலையவைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் சுமார் 2,03,166 மனித உயிர்களை குடித்திருக்கிறது கொரோனா.

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கபட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் அமெரிக்கா முதல்நிலை பெறுகின்றது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60,651.

அந்தவகையில்,

*அமெரிக்காவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 54,256 நேற்று மட்டும் 2065

*இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 26,384 நேற்று மட்டும் 415

*ஸ்பெயினில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,902 நேற்று மட்டும் 378

*பிரான்சில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,614 நேற்று மட்டும் 369

*இங்கிலாந்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 20,319 நேற்று மட்டும் 813

*ஜேர்மனியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5877 நேற்று மட்டும் 177

அதேநேரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 8,36,683 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பலியெடுப்பு 2 இலட்சத்தை கடந்தது

உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய இலங்கை நேரப்படி இரவு 10 மணியளவில் உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 200,569 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,871,247 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823,306 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் இது வரை பதிவான உயிரிழப்புகளில் பிரித்தானியாவில் அதிகமான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அங்கு இன்றைய தினம் இதுவரை 813 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானியாவின் உயிரிழப்பு 20,319 ஐ எட்டியுள்ளது.

அத்துடன் அதிகூடிய புதிய தொற்றாளர்கள் ரஸ்யாவில் பதிவாகியுள்ளனர். அங்கு இன்றைய தினம் இதுவரை 5,966 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

சீனாவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம்

சீனாவில் நேற்று சனிக்கிழமை புதிய கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த 11 புதிய கொரோனா தொற்றாளர்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர். இந்த உறுதிபடுத்தப்பட்ட 11 புதிய கொரோனா தொற்றாளர்களுக்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய 30 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்படவில்லை.

இதேவேளை சுமார் 1,000 கொரோனா தொற்று அறிகுறியற்ற நோயாளிகள் இன்னும் சீனா முழுவதும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இன்றுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அங்கு 82,827 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 4,632 ஆகவும் காணப்படும் நிலையில் 77,394 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுமுள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 203,025 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அது மாத்திரமன்றி 185 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 2,898,082 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 822,165 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

கொரோனாவினால் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் சனிக்கிழமையன்று 48,529 புதிய கொரோனா தொற்றாளர்களும், 2,772 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 4624 - Today Page Visits: 3