ஒரு நாள் விமானியாகி வைரலான சிறுவனின் வீடியோ

சவூதி அரேபியாவில் 6 வயது சிறுவன் விமானம் ஓட்டிய வீடியோ காண்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறது.

சவூதி அரேபியாவில் உள்ள எதிகாட் விமான நிறுவனத்தில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் ஒருநாள் விமானியாக பணியாற்றினான். விமானத்தின் செயல்முறை குறித்த அவனது அறிவு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் ஆதம் விமானம் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளான். அந்த சிறுவன் வருங்காலத்தில் சிறந்த விமானியாக வருவான் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவனுடைய கனவு விரைவில் நினைவாகும் எனவும் தெரிவித்தனர்.

விமானி போன்று உடை அணிந்து மற்றொரு விமானியுடன் இணைந்து எதிகாட் விமான பயிற்சி மையத்தில் உள்ள A380 விமானத்தை ஓட்டினான். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது வரை 21 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து உள்ளனர்.