குவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி

அயர்லாந்து நாட்டில் சுழன்றடித்த ஒபிலியா புயல் மிக மோசமான சேதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் உதவி செய்திருக்கிறது. இந்த சீசனுக்கு விளைந்திருந்த அப்பிள்களைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி. கூலியாக பெருமளவு பணமும் செலவாகும் விடயமும் கூட.

ஆனால் ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து அப்பிள்களையும் நிலத்தில் விழுத்தி விட்டது. அப்பிள்கள் என்ன ஆகுமோ என்று பயந்திருந்த விவசாயிகள், மறுநாள் தோட்டங்களுக்குச் சென்று பார்த்தபோது மகிழ்ச்சியடைந்தார்கள்.

குவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி

மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை. போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதபடி ஆப்பிள்களால் மூடப்பட்டிருந்தது தோட்டம். பழங்கள் எந்தவிதத்திலும் சேதமடையவில்லை.

விவசாயிகளுக்கோ இன்ப அதிர்ச்சி..
குவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி