தெறி என் ஜீவன் வீடியோ பாடல் – 2 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை.

விஜய் நடித்துள்ள ‘ படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பல வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. ‘தெறி’ படத்திற்குப் பிறகு ‘பைரவா, மெர்சல்’ ஆகிய படங்கள் வந்தாலும் இசை ரசிகர்கள் ‘தெறி’ படத்தின் பாடலை இன்னும் யு டியூபில் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் நா.முத்துக்குமார் எழுதி, ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி பாடி இடம் பெற்ற பாடலான ‘என் ஜீவன்…’ பாடல் தற்போது 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களைக் காட்டிலும் இந்தப் பாடல் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி என் ஜீவன் வீடியோ பாடல் - 2 கோடி பார்வைகளைக்  கடந்து சாதனை.

‘தெறி’ படத்தின் மற்ற பாடல்களான ‘ராங்கு..’ பாடல் 14 லட்சம் பார்வைகளையும், ‘செல்லக்குட்டி…’ பாடல் 79 லட்சம் பார்வைகளையும், ‘ஜித்து ஜில்லாடி…’ பாடல் 1 கோடி பார்வைகளையும், ‘ஈனா மீனா டீக்கா…’ பாடல் 1 கோடியே 33 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.