பெண் உதவியாளரிடம் செக்ஸ் பொம்மை வாங்குமாறு கூறிய பிரிட்டன் எம்.பி

பெண் உதவியாளரிடம் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய 2 செக்ஸ் பொம்மை வாங்கி வரும்படி கூறியதாக பிரித்தானிய மந்திரி மார்க் கார்னியர் ஒப்பு கொண்டுள்ளார்.

இங்கிலாந்தில் மந்திரி ஒருவரும், 3 எம்.பி.க்களும் தங்கள் பெண் உதவியாளர், பெண் ஊழியர்கள் மற்றும் பல பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதாக பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது சம்மந்தமாக கருத்து வெளியிட்ட பிரதமர் தெரசாமே இந்த வி‌ஷயம் கவலைக்குரியது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மந்திரி ஒருவர் தானாகவே முன்வந்து இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். அந்த மந்திரியின் பெயர் மார்க் கார்னியர். அதுபற்றி அவர் கூறியதாவது:-

நான்தான் என் பெண் உதவியாளருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார்கள். ஆனால் நான் அவருக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கவில்லை. நான் என் உதவியாளரிடம் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய 2 செக்ஸ் பொம்மை வாங்கி வரும்படி கூறினேன். இதில் ஒன்று எனது மனைவிக்கும், மற்றொன்று எனது தொகுதி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கும் கொடுப்பதற்காக வாங்கி வர சொன்னேன்.

இதை அவர் எதிர்த்து வெளியேறிவிட்டார். நான் செக்ஸ் பொம்மை வாங்க சொன்னதை செக்ஸ் தொல்லையாக கருத முடியாது. பயன்பாட்டுக்காக சாதனங்களை வாங்கி வர உதவியாளரிடம் சொல்வது சாதாரணமான வி‌ஷயம் தான். இதில் தவறாக நான் நடந்து கொண்டதாக கருதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.