இந்திரஜித் ரன் குவிப்பால் தமிழ்நாட்டுக்கு பெருமை

மிழக கிரிக்கெட் வரலாற்றில் “இது ஒரு மெகா சாதனை’’ எனச் சிலிர்க்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். பல வருடங்களாக மும்பை அணியிடம் தோல்வியை மட்டுமே பெற்றுவந்த தமிழகம் இந்த முறை மும்பையைவிட அதிக ரன்கள் குவித்திருக்கிறது. மும்பை முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் குவிக்க, 69 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது தமிழ்நாடு. ஆனால், வாஷிங்டன் சுந்தரோடு பார்ட்னர்ஷிப் போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டார் பாபா இந்திரஜித்.

இந்த மேட்சில் 14 பவுண்டரிகளுடன் 152 ரன்கள் குவித்தார் இந்திரஜித். சில மாதங்களுக்கு முன்பு துலீப் டிராஃபி போட்டியில் முதல் மேட்சிலேயே இரட்டை சதமும் விளாசியவர்தான் இந்திரஜித். துலிப் டிராஃபி வரலாற்றில் அறிமுகப்போட்டியிலேயே இரட்டை சதம் அடித்த சாதனை இந்திரஜித் தவிர மூன்று பேருக்கு மட்டுமே உண்டு. அசாருதின், மஞ்ச்ரேக்கருக்கு அடுத்து இந்திரஜித்தின் சகோதரர் அபராஜித் இதே சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

கலக்குங்க பிரதர்ஸ்.

நன்றி: விகடன்