செம வைரலான வீடியோ!- பொலிஸாருடன் தம்ஸ் அப் செய்யும் நாய் (Video)

காவல் துறையில் நாய்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளைக் காட்டிகொடுப்பதில் காவல் துறையில் உள்ள நாய்கள் மிகவும் திறமை வாய்ந்தவை. செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் காவல் துறையில் பல சாதனைகள் புரிந்து வருகின்றன.

செம வைரலான வீடியோ!- பொலிஸாருடன் தம்ஸ் அப் செய்யும் நாய் (Video)

தற்போது, அமெரிக்காவில் காவல் துறையில் பயிற்சி பெற்ற நாய் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அலாபாமா மாகாணத்தில் உள்ள காவலர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோவில் காவலர்கள் இரண்டு பேர் உடற்பயிற்சி செய்கின்றனர். அப்போது அவர்களுடன் இணைந்து நாய் ஒன்று உடற்பயிற்சி செய்கிறது.

மேலும், நாய் உடற்பயிற்சி செய்யும்போது பாடல் இசைக்கப்பட்டது. நாய் பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்கிறது. இரண்டு வயதான டஜ் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளது.

செம வைரலான வீடியோ!- பொலிஸாருடன் தம்ஸ் அப் செய்யும் நாய் (Video)

அந்த வீடியோவை இதுவரை 7 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். 25,400 பேர் இதைப் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.