பில்கேட்ஸை முந்திய அமேசன் நிறுவனர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை உறுதி செய்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத கடைசி வெள்ளி கிழமையில் ‛பிளாக் பிரைடே ‘ கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் அமேசான் நிறுவனம் பல சலுகைகளை அறிவித்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

கடந்த 4 மாதங்களுக்கு முன் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (90 பில்லியன் டாலர் மதிப்பும்) அமேசன் நிறுவனர் ஜெப் (90.6 பில்லியன் டாலர் மதிப்பு) ஆகியோர் இருந்தனர். அப்பொழுதே அமேசான் நிறுவனர் உலக அளவில் முதலிடத்தை பிடித்து விட்டாலும் அதை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் ‛பிளாக் பிரைடே’ விற்பனைக்கு பிறகு அமேசான் நிறுவனர் ஜெப்பின் பணமதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளார். அதுவும் ஒரு நாளில் நடந்த வியாபாராத்தின் மூலம் அவர் இந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 46 - Today Page Visits: 1