பூனைக்கு கோவில் கட்டி பயபக்தியுடன் வழிபடும் கிராம மக்கள் – வீடியோ இணைப்பு

இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கிராமத்தில், பூனைக்கு கோவில் கட்டி பூஜை செய்யப்படுகிறது. பூனை குறுக்கே வந்தால், அபசகுனமாக கருதப்படும் நிலை இன்றும் கிராமங்களில் உள்ளது.

பூனைக்கு கோவில் கட்டி பயபக்தியுடன் வழிபடும் கிராம மக்கள் - வீடியோ இணைப்பு

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, மாண்டியா மாவட்டத்தில், பெக்காலாலே கிராம மக்கள், பூனையை கடவுளாக வழிபடுகின்றனர். கன்னடத்தில், ‘பெக்கூ’ என்பதற்கு, பூனை என, பொருள். அதன்படி, இந்த கிராமத்தின் பெயரும் அமைந்துள்ளது. மாண்டியாவில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், பூனையை வழிபடும் வழக்கம், 1,000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியதாக கூறப்படுகிறது. பெண் கடவுளான, தேவி மங்கம்மா, பூனையின் உருவில் கிராமத்திற்கு வந்ததாகவும், தீய சக்திகளை விரட்டி மக்களை காத்ததாகவும், கிராம மக்கள் நம்புகின்றனர்.

இது குறித்து, கோவில் பூசாரி, ஆர்.வாசவராத்யா கூறியதாவது: எங்கள் முன்னோர் எதிரே, தேவி மங்கம்மா, பூனை வடிவத்தில் தோன்றி, தன்னுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தி மறைந்தார். அந்த இடத்தில், ஒரு புற்று தோன்றியது. அதன்பின், பூனை வடிவில், தேவியை வணங்கும் வழக்கம் துவங்கியது.

பூனைக்கு கோவில் கட்டி பயபக்தியுடன் வழிபடும் கிராம மக்கள் - வீடியோ இணைப்பு

கிராமவாசிகள் யாரும் பூனைகளை துன்புறுத்தக் கூடாது. மீறினால், அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். பூனை இறந்து கிடப்பதை பார்த்தால், அதை அடக்கம் செய்யாமல் அங்கிருந்து செல்வதில்லை. மேலும், மங்கம்மா தேவிக்கு திருவிழாவும் நடத்தப்படுகிறது என்றார்.