ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை.. ஜெ. அத்தை மகள் லலிதா திடுக்தகவல்!

பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகளான லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூரில் வசிக்கும் லலிதா, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். அவர் எங்கள் மாமா மகள். ஜெயலலிதாவுக்கும் ஒருவருக்கும் காண்டாக்ட் இருந்தது தெரியும். ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை. எங்கள் பெரியம்மாதான் அவருக்கு பேறுகாலம் பார்க்க உதவி செய்தார்.

வெளியே சொல்ல கூடாது

ஜெயலலிதா இந்த விஷயத்தை தெரிவிக்க கூடாது என்று சத்தியம் வாங்கி வைத்திருந்தார். 1970க்கு பிறகு ஜெயலலிதா எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. குழந்தை பேறுகால நேரத்தில் மட்டுமே உதவிக்காக எனது பெரியம்மாவை அழைத்தார்.

DNA டெஸ்ட்

சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி முறை. சைலஜாதான் அமிருதாவை வளர்த்தார் என்பதால் ஒருவேளை இதுதான் ஜெயலலிதாவின் மகளாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். ஆனால் அந்த குழந்தை அமிருதாவா என்று உறுதியாக தெரியவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் உண்மை தெரியவரும்.

சொத்துக்கு ஆசைப்படவில்லை

அமிருதா, ரஞ்சனி மூலமாக கடந்த 3 மாதங்களாகதான் தெரியும். என்னை அத்தை என்று கூப்பிடுகிறார். அமிருதா மனதில் தனது அம்மா ஜெயலலிதா என்று நினைக்கிறார். ஐயங்கார் முறைப்படிதான் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெற வேண்டும் என்று அமிருதா விரும்புகிறார். சொத்துக்காக அவர் ஆசைப்படுவதை போல தெரியவில்லை.

மனிதாபிமான உதவி

ஜெயலலிதா அரசியல் களத்திற்கு போன பிறகு நாங்கள் அவரை சந்திக்கவில்லை. 1980களில் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது. அப்போதே, ஜெயலலிதா தாய் சத்யா இறந்துவிட்டதால், மனிதாபிமான அடிப்படையில் எனது பெரியம்மா பேறுகாலம் பார்க்க சென்றார். அதேநேரம், இதற்காக எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. அமிருதாவை டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் மட்டுமே அது ஆவணமாக அமையும். இவ்வாறு லலிதா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் வசிக்கும் லலிதா, தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டி :

Total Page Visits: 81 - Today Page Visits: 1