பாத வெடிப்பு: வீட்டிலேயே குணப்படுத்தும் வழிகள்

‘காலங்களில் அவள் வசந்தம்…’ என்று பாடுவதைப்போல், ‘பாதங்களில் அவள் ரோஜா இதழ்’ என்று வர்ணித்தாலோ, பாடினாலோ எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், பாத வெடிப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த அழகையே கெடுக்கிறது. சரி… என்ன வகையான வழிமுறைகளை கையாளலாம்?

பருமனான உடல்வாகு இருப்பவர்களுக்கு குதிகால் பாத வெடிப்பு ஏற்படுவது என்பது இயல்பு. ஆனால், சிலர் எளிமையான சிகிச்சை முறைகளைக் கையாளுவதின் மூலம் சரி செய்யலாம்.

மேலும், வறட்சியான பகுதிகளில் நடப்போருக்கும் இந்த வகையான பிரச்னை இருக்கிறது.

வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியைக் கலந்து பேஸ்ட் போல குழைத்து, வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

விளக்கெண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள் தூளைக் கலந்து தடவிவர, சில நாள்களில் நல்ல மாற்றம் தெரியும்.

இரவு உறங்கும் முன் கால்களில் லேசான ஈரப்பதம் இருக்கும் வகையில் ஏதாவது க்ரீம்களையோ, லோஷன்களையோ பூசி வரலாம்.

முக்கியமாக, காலணிகள் இன்றி நடப்பதை தவிர்க்க வேண்டும்.

எங்கேனும் காலணி இல்லாமல் சென்று வந்த பின்பு, கால்களைச் சுத்தமாக கழுவி பராமரிப்பது என்பது கூடுதல் விஷயம்.

ஏற்கெனவே பாதங்களில் வெடிப்புகளும் எரிச்சல்களும் உள்ளவர்கள் பின் பாதம் தெரியாத வகையில் காலணிகளை அணியலாம்.

இனிமேல் பாருங்கள்… “அவள் காலணி இல்லாமல் எடுத்து வைக்கும்போது சிலிர்த்துக் கொள்கிறது பூமி” என்று போற்றுமளவுக்கு மென்மையாவீர்கள்.

Total Page Visits: 75 - Today Page Visits: 1