நாச்சியார் சர்ச்சை: என்ன சொல்கிறார் ஜோதிகா?

நாச்சியார் பட டீசரில் இடம்பெற்றுள்ள ஆபாச வசனம் குறித்து நடிகை ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக ஜோதிகா நடித்துள்ள படம் நாச்சியார். ஜி.வி.பிரகாஷ் திருடனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 15ஆம் தேதி அன்று யூடியூப்பில் வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஆபாச வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

பெண்மையை இழிவுப்படுத்தும் விதமாக நாச்சியார் படத்தில் வசனம் பேசி நடித்துள்ளதாக ஜோதிகாவுக்கு எதிராக கோவை மற்றும் கரூர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 29) மாலை சென்னை போயஸ் கார்டன் பகுதியில் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜோதிகா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நாச்சியார் பட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜோதிகா, “நாச்சியார் படம் வெளிவரும்போது டீசர் சர்ச்சைகள் அனைத்துக்கும் விளக்கம் கிடைக்கும். அதைப்பற்றி மேலும் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

Total Page Visits: 153 - Today Page Visits: 2