கடலோனியா மக்களின் பிரமாண்ட பேரணியால் அதிர்ந்த ஸ்பெயின் (Video)

ஸ்பெயின் நாட்டின் வளம்மிக்க பகுதியான கட்டலோனியா, தனிநாடு கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இவர்களது தொடர் கோரிக்கைக்கு பெரும் தடையாக நின்றது ஸ்பெயின். அந்தத்தடையையும் மீறி பொதுவாக்கெடுப்பு நடத்தியது கட்டலோனிய மாநில அரசு.

வாக்களிக்க வந்தவர்களின் மீது பல்வேறு அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டது ஸ்பெயின். இவை அனைத்தையும் மீறி வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கடலோனியா மக்களின் பிரமாண்ட பேரணியால் அதிர்ந்த ஸ்பெயின் (Video)

இதையடுத்து, அக்டோபர் மாதம் 27-ம் தேதி ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கட்டலோனியா பாராளுமன்றம். இது அறிவிக்கப்பட்ட சில நேரத்திலேயே கட்டலோனிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

மேலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கட்டலோனியா தலைவர் கார்லெஸ் பூயிக்டேமோண்ட் உட்பட இதர தலைவர்கள் மீது ஸ்பெயின் வழக்கு தொடர்ந்தது. மேலும், கட்டலோனியாவின் முக்கியத் தலைவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலோனியா மக்களின் பிரமாண்ட பேரணியால் அதிர்ந்த ஸ்பெயின் (Video)

மேலும், சில கட்டலோனிய தலைவர்களும் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை விடுவிக்கக்கோரி பார்சிலோனாவில் மிகப்பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், ஸ்பெயின் அரசுக்கும், அதன் தலைமைகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கடலோனியா மக்களின் பிரமாண்ட பேரணியால் அதிர்ந்த ஸ்பெயின் (Video)

இந்தப் பேரணியில் 7 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்றதாக ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தப் பேரணி.