சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோவில் நடையை திறந்து, பூஜை செய்தார்.

நாளை முதல் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் கோவில் நடை திறப்பு மற்றும் அடைப்பு நேரங்கள் நீட்டிக்கப்படும்.

டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு நடை அடை‌க்க‌ப்பட்டு, மகர ‌விள‌க்கு பூஜை‌க்காக டிச‌ம்ப‌ர் 30-ம் தேதி ‌மீ‌ண்டு‌ம் நடை ‌திற‌க்க‌ப்படு‌கிறது.

இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் 6 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Total Page Visits: 134 - Today Page Visits: 3