படித்தாலே அழ தோன்றும், சமந்தாவின் மறுபக்கம்…

[sm-youtube-subscribe]

நடிகை சமந்தா, 2007இல் இரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசாவேயே முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார். இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் ,தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர் பெற்ற நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தார்.

தற்போது சமந்தா நாக அர்ஜூனாவின் மகனான சைதன்யாவை திருமணம் செய்துள்ளார்..திருமணம், ஹனிமூன், வெளிநாட்டு சுற்றுலா, கணவருக்காக சமைக்கும் முயற்சி என இருந்தவர் தற்போது பட ஷுட்டிங்கில் பிசியாகி விட்டார்.

சமூக நலனுக்கான அவரும் பல விஷயங்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.
2012 ம் ஆண்டு முதல், இவர் பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவரது நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.

குழந்தைகளுக்கு தேவையான நிதி திரட்ட நடிகர், நடிகைகளையும் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

தற்போது அந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள். கவர்ச்சியையும், கிசுகிசுக்களையும் மட்டும் விமர்சிக்காது, இது போன்ற நல்லவற்றை விமர்சிப்போமாக..!

Total Page Visits: 84 - Today Page Visits: 1