திருடச் சென்ற இடங்களில் பெண்களிடம் பாலியல் வன்புணர்வு: சில்மிஷத் திருடன் தொடர்பில் பகீர் தகவல்கள்

சில்மிஷத் திருடன் அறிவழகன், புழல் சிறையில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், அவருக்கு தினமும் கவுன்சலிங் அளிக்கப்பட்டுவருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சைதாப்பேட்டை சடையப்பன் தெருவைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இன்ஜினீயரிங் படித்துவிட்டு சொந்தமாக பிரின்ட் தொழில் செய்துவருகிறார். கடந்த 16-ம் தேதி, தரமணியில் உள்ள நண்பரைச் சந்தித்துவிட்டு வேளச்சேரி, விஜயநகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, மர்மநபர் ஒருவர் கத்தியைக் காட்டி வில்லியம்ஸை மிரட்டியுள்ளார். பிறகு, அவரது பாக்கெட்டிலிருந்து 8,500 ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை வழிப்பறிசெய்த திருடன், அங்கிருந்து தப்பி ஒட முயன்றான். அப்போது வில்லியம்ஸ் சத்தம் போட்டதால், அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வழிப்பறித் திருடனைப் பிடிக்க முயன்றனர்.

திருடச் சென்ற இடங்களில் பெண்களிடம் பாலியல் வன்புணர்வு: சில்மிஷத் திருடன் தொடர்பில் பகீர் தகவல்கள்

அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற திருடன், கற்களை வீசியதோடு, அருகில் இருந்த பெட்டிக்கடையிலிருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களை உடைத்துத் தகராறுசெய்துள்ளான். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தி திருடன் தப்பிச் சென்றுவிட்டான். அப்போது, அவரிடமிருந்து வாக்காளர் அடையாள அட்டை ஒன்று விழுந்தது. அதில், அறிவழகன் என்ற பெயரும் முகவரியும் இருந்தது. அதன்அடிப்படையில் வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார், வழிப்பறித் திருடன் அறிவழகனைக் கைதுசெய்து விசாரித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வழிப்பறி மட்டுமல்லாமல் திருடச் சென்ற இடங்களில் பெண்களிடம் சில்மிஷத்திலும், பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்ட தகவல் தெரியவந்தது.

திருடச் சென்ற இடங்களில் பெண்களிடம் பாலியல் வன்புணர்வு: சில்மிஷத் திருடன் தொடர்பில் பகீர் தகவல்கள்

இதையடுத்து, போலீஸ் உயரதிகாரிகளுக்கு வேளச்சேரி போலீஸார் தெரிவித்த தகவலின்அடிப்படையில், தனிப்படை போலீஸார் அறிவழகனிடம் விசாரித்தனர். அப்போது கிடைத்த வீடியோ ஆதாரங்கள், போலீஸாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் வீடியோ ஆதாரத்தில் உள்ள பெண்கள் யாரும் புகார் கொடுக்காததால், வழிப்பறி தொடர்பான பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு போலீஸார் கைதுசெய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அறிவழகன், அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் அறிவழகனுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுவருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் நம்மிடம் கூறுகையில், “நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, விசாரணைக் கைதிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. வழிப்பறி வழக்கில் கைதான அறிவழகன் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மேலும், அவர் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனால், அறிவழகனை தீவிரமாகக் கண்காணிப்பதோடு, அவருக்கு தினமும் கவுன்சலிங் அளிக்கப்பட்டுவருகிறது. கவுன்சலிங் மூலம் அறிவழகன் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறார்” என்றனர்.

திருடச் சென்ற இடங்களில் பெண்களிடம் பாலியல் வன்புணர்வு: சில்மிஷத் திருடன் தொடர்பில் பகீர் தகவல்கள்

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது இந்திய தண்டணைச் சட்டம் (ஜ.பி.சி) 341, 294 பி, 336, 427, 392, 506 (11) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவழகனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், சில வீடியோக்கள் இருந்தன. அந்த வீடியோ குறித்து விசாரித்தபோதுதான், அறிவழகன் உண்மையைத் தெரிவித்தார். திருடச் சென்ற இடங்களில் தனியாக இருந்த பெண்களிடம் எல்லை மீறி நடந்ததாக அறிவழகன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இரண்டு பேர் ரகசியமாகப் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில், அறிவழகன் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதற்கிடையில், அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. 5 நாள்கள் போலீஸ் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. போலீஸ் காவலின்போது, அறிவழகனிடம் வீடியோகுறித்தும் பெண்கள் விவகாரம் குறித்தும் விசாரிக்க உள்ளோம்” என்றனர்.