செல்போனை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஆபத்து

மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.

அவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசியதாவது:-

செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தொழில்நுட்பம் நமக்கு மறைமுக ஆபத்தை விளைவிக்க கூடியது.

ஒரு நாளைக்கு 30 நிமிடத்துக்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.

செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம்.

ஏனெனில் அவர்களின் மூளை கபாலம் மிகவும் மென்மையானது. செல்போன் கதிர்வீச்சு உடனடியாக அவர்களின் மூளையை பாதிக்கும்.

தொடர்ச்சியாக செல்போன்களை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்பட 400 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

மேலும் அவர்களின் டி.என்.ஏ.விலும் பாதிப்பு ஏற்படும். இதை தவிர தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகும்.

மனிதர்கள் மட்டுமன்றி செல்போன் கதிர்வீச்சால் விலங்குகள் மற்றும் தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Total Page Visits: 102 - Today Page Visits: 1