ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்துவருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகிவரும் நிலையில் ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்களிடம் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோயை உருவா‌க்குவத‌ற்கான ஜ‌ீ‌ன்க‌ள் உ‌ள்ளன எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

உலக அளவில் பெண்களை அதிகமாகப் பாதிக்கும் நோய்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது மார்பகப் புற்றுநோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 61 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். தோ‌ல், சுர‌ப்‌பிக‌ள், எழு‌ம்புக‌ள் ஆ‌‌கிவ‌ற்‌றி‌ல் உருவாகு‌ம் பு‌ற்றுநோ‌ய்க‌ள் ம‌ட்டுமே ஆ‌ண்களை அ‌திக‌ம் தா‌க்குவதா‌ல், அவ‌ர்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் ப‌ற்‌றி‌க் கவலை‌‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம் மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

பொதுவாக 35 வயதுக்கு பின்னர் ஏற்படும் நோயாக கருதப்பட்டாலும் சிலருக்கு இளவயதிலேயே இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்நோய் தீவிரமடையும் முன் தடுக்கலாம். ஆனால், பலரும் இதை அலட்சியம் செய்வதால் நிலைமை மோசமாகிவிடுகிறது. பெண்களுக்கு அதிகம் உண்டாகும் நோய் என்றாலும் ஆண்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 2 சதவீதம் மார்பகப் புற்றுநோய்தான்.

மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோயை உருவா‌க்கு‌ம் ஜ‌ீ‌ன்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ஆ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் இரு‌ந்துதா‌ன், அவ‌ர்க‌ளி‌ன் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு‌ப் பரவு‌கிறது எ‌‌ன்‌கிறா‌ர் அமெ‌ரி‌க்கா‌‌வி‌ன் ‌பிலடெ‌ல்ஃ‌பியா மாகாண‌த்‌தி‌ல் உ‌ள்ள ஃபா‌க்‌ஸ் பு‌ற்றுநோ‌ய் ஆ‌ய்வு மைய‌த்‌தி‌ன் மரு‌த்துவ‌ர் மே‌ரி டெ‌லி.

ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

பெரு‌ம்பாலான ஆ‌ண்க‌ள் த‌ங்க‌ளிட‌‌ம் மா‌ர்பக‌ப் பு‌ற்று‌க்கான ஜ‌ீ‌ன்க‌ள் உ‌ள்ளனவா எ‌ன்பதை சோதனை மூல‌ம் தெ‌ரி‌‌ந்துகொ‌ள்ள மு‌ன்வருவ‌தி‌ல்லை எ‌ன்று கூறு‌ம் அவ‌ர், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பெ‌ண்க‌ளி‌ன் சகோதர‌ர்க‌ள், கணவ‌ர், த‌ந்தை ஆ‌கியோரை சோதனை செ‌ய்து கொ‌ள்ளுமாறு வ‌ற்புறு‌த்‌தி வருவதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர். அமெ‌ரி‌க்கா‌வி‌ல் மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் எ‌ன்பது சாதாரண ‌விடயமா‌கி‌வி‌ட்டது. இ‌ந்த ஆ‌ண்டு 1,78.000 பெ‌ண்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது க‌ண்டு‌பி‌‌டி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இ‌தி‌‌ல் 40,000 பே‌ர் இற‌ந்து ‌விடுவா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

அதேநேர‌த்‌தி‌ல் 2,030 ஆ‌ண்களு‌க்கு‌ம் மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் வ‌ந்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. ஆனா‌ல் இது ஒ‌ட்டுமொ‌த்த பு‌ற்றுநோ‌ய் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோ‌ர் எ‌‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் 1 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் குறைவு எ‌ன்பதா‌ல் யாரு‌ம் கவலை‌ப்படுவதில்லை.

ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

ஆ‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள BRCA-1 அ‌ல்லது BRCA-2 ஆ‌கிய ஜ‌ீ‌ன்க‌ள் மா‌ர்பக‌ப் பு‌ற்று நோ‌ய்‌க்கு‌க் காரணமாக உ‌ள்ளன. இ‌ந்த ஜ‌ீ‌ன்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் பெ‌ண் குழ‌ந்தைகளு‌க்கு அவ‌ர்க‌ளி‌ன் த‌ந்தை‌யிட‌மிரு‌ந்து கட‌த்த‌ப்படு‌கிறது. இதை‌ப்ப‌ற்‌றி மரு‌த்துவ‌ர் கூறுகை‌யி‌ல், “ஏ‌‌ற்கெனவே மா‌ர்ப‌க‌ப் பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பெ‌ண்க‌ள் உ‌ள்ள குடு‌ம்ப‌ங்க‌ளி‌ல், ‌சிறு குழ‌ந்தைக‌ளி‌ன் த‌ந்தைக‌‌ள் க‌ண்டி‌ப்பாக ஜ‌‌ீ‌ன் சோதனை செ‌ய்துகொ‌ள்வது ந‌ல்லது எ‌ன்றா‌ர்.