இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

Subscribe our YouTube Channel

ஆண், பெண் இருபாலருக்குமே அவசியமானது ஃபோலிக் அமிலம். செல்களில் டி.என்.ஏ, மற்றும் ஆர்.என்.ஏ, வளர்ச்சிக்கு இதுவே உறுதுணையாக இருக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால், பக்கவாதம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுகிறது. சமீபகால ஆராய்ச்சிகளில் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், ஞாபகசக்தியுடன் இருக்கவும் இந்த சத்துக்கள் உதவி செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

தவிர, செல்கள் விரைவில் மூப்படைவதையும் தடுக்கிறது. சிலருக்கு, சிறிய வயதிலேயே முதியவர் போன்ற தோற்றம் இருக்கும். ஃபோலிக் ஆசிட் சத்துக்களை எடுத்துக்கொண்டால், இந்தக் குறைபாடு தவிர்க்கப்படும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

ஃபோலிக் அமிலம் :

ஃபோலிக் அமிலம் நீரில் கரையும் வைட்டமின்களில் மிகவும் முக்கியமானது. அனீமியா எனும் ரத்தச்சோகை நோயைக் குணப்படுத்துவதில் வைட்டமின் B12 உடன் ஃபோலிக் அமிலமும் இணைந்து செயல்படுகிறது. நமது உடலில் கல்லீரலில் 3 முதல் 4 மாதத்துக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் சேர்த்து வைத்துக்கொள்ளப்படுகிறது. நமது உணவின் மூலம் ஃபோலிக் அமிலம் கிடைத்தாலும் அது சரிவர உறிஞ்சப்படுவதில்லை.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

கர்ப்பம் :

கரு உண்டாவதில் பிரச்னை, கரு தங்கலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பெண்கள் பலர் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே, மருத்துவர்கள் விட்டமின் – பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

குழந்தைக்குத் தேவை :

கர்‌ப்பகால‌த்‌தி‌ல் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், கருவின் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் ஹீமோகுளோபின் அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம், குழந்தையின் `டிஎன்ஏ’ வளர்ச்சிக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமானது. கருவில் இருக்கும் குழந்தையின் மூளையைச் சுற்றிலும், ஆரம்ப மாதங்களில் மண்டை ஓடு வளராமல் இருக்கும். ஃபோலிக் ஆசிட், தாய் மூலமாகக் கருவுக்குக் கிடைப்பதன் மூலம், அந்த எலும்புகள் விரைவாக வளர்ச்சி அடையும். அதோடு, மூளையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

பெண்கள் :

ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் கர்ப்பிணி களுக்கானது மட்டுமல்ல. ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்தசோகை உள்ள பெண்கள், சிறுவயதாக இருந்தாலும், அது கண்டறியப்பட்ட நாளில் இருந்து மருத்துவரின் ஆலோசனையோடு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம். ஏனெனில், ஹீமோகுளோபினை இரும்புச்சத்து மாத்திரைகளால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

நன்மைகள் :

ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வதால் இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து தற்காப்பு பெறலாம். குடல் பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்பு உடைய ஆண்களுக்கும் மருத்துவர்கள் ஃபோலிக் ஆசிட் மாத்திரையைப் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

எப்போதிருந்து சாப்பிடலாம்? :

20 வயதைக் கடந்த உடனே அல்லது திருமணப் பருவத்துக்கு வரும்போதே பெண்கள் ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஃபோலிக் அமிலச் சத்துக்கள் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடலாம். இதனால், அவர்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

இதயநோய் :

ஃபோலிக் அமிலம். இதயம் சரியாக வேலை செய்ய, மாரடைப்பு வராமல் தவிர்க்கவும் இது உதவி செய்கிறது. ‘ஹோமோசிஸ்டெய்ன்’ (Homocysteine) என்னும் வேதிப்பொருள் உடலில் அதிகம் சுரப்பதே மாரடைப்புக்குக் காரணம். ஃபோலிக் ஆசிட் இந்த வேதிப்பொருளை, ‘மெத்தியோனைன்’ (Methionine) என்னும் வேதிப்பொருளாக மாற்றிவிடும். எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது. 40 வயதைத் தாண்டிய ஆண்கள், இதய நோய் வராமல் தவிர்க்க, மருத்துவர்களின் ஆலோசனையுடன் இதனை மாத்திரையாக எடுத்துக் கொள்ளலாம்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

யாருக்குத் தேவை? :

அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அவசியம். கருத்தரிக்கத் திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும், மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே தினசரி ஃபோலிக் அமில மாத்திரை எடுத்துக்கொள்வது நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியம். வலிப்பு நோயாளிகள், டைப் 2 சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், குடிநோயாளிகள் ஆகியோருக்கும் அவசியமான சத்து இது.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

மரபணு :

பிகாம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் மிகவும் முக்கியமானது ஃபோலிக் அமிலம். இது, `வைட்டமின் பி9′, `ஃபோலிக் அமிலம்’, `ஃபோலேட்’ என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மரபணுக்கள் உருவாக்கத்தில் ஃபோலிக் அமிலத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

எப்படிச் சாப்பிடலாம்? :

குழந்தைப்பேறுக்கு திட்டமிடும் பெண்கள் மற்றும் கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். ஃபோலிக் அமிலம் நீரில் கரையக்கூடிய வைட்டமின். எனவே, இந்த சத்து நிறைந்த உணவுகளை முடிந்தவரை அப்படியே சாப்பிட வேண்டும். ஏனெனில், சமைக்கும்போது உணவில் உள்ள ஃபோலிக் அமிலம் பெருமளவு சிதைந்துவிடும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

உணவுகள் :

சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். பச்சை நிறக் காய்கறிகள், கீரை உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதன் மூலம் ஃபோலிக் அமிலத்தைப் பெற முடியும். முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பாலக்கீரையைச் சாப்பிடுவதால், அதிகப் பலன் பெற முடியும். பால், முட்டையின் மஞ்சள் கரு, அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

பீட்ரூட் :

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

ஆப்பிள் :

தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

இரும்புச்சத்து :

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

மாதுளைப்பழம் :

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

வைட்டமின் சி :

வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அதிலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.

இருபது வயதைக் கடந்த எல்லாரும் இத கண்டிப்பா சாப்பிடுங்க!!!

உடற்பயிற்சி:

தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.