தோனிக்கு வயதாகிவிட்டதா? (Video)

தோனிக்கு வயதாகிவிட்டது, அவர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும், அவர்களுக்கு இணையாக இனி அவரால் செயல்பட முடியாது என்று எப்போதெல்லாம் பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் தோனி தனது நிலை என்னவென்பதை ஏதாவது ஒரு வகையில் இந்த உலகத்துக்குத் தெரியவைக்கிறார்.

தோனிக்கு வயதாகிவிட்டதா? (Video)

நேற்று மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். அப்போது தோனி, ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் அருகருகே பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.

தோனிக்கு வயதாகிவிட்டதா? (Video)

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென்று இருவரும் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் வேகம் காட்டிய ஹர்திக் பாண்டியா 30 மீட்டர்களுக்குள் சீரான வேகத்துக்கு மாறிவிட்டார். தொடக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்த தோனி 100 மீட்டர்களைக் கடக்கும்போது ஹர்திக் பாண்டியாவைவிட ஒரு அடி முன்னால் சென்றுவிட்டார்.

தோனிக்கு வயதாகிவிட்டதா? (Video)

இதைப் பார்த்த ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவைவிட 12 வயது மூத்தவராக இருந்தாலும் தோனி உடல் திறனுடன் இருப்பது குறித்துப் பெருமைப்பட்டுக்கொண்டனர்.

தோனிக்கு வயதாகிவிட்டதா? (Video)

கிரிக்கெட்டிலும் சரி, கால்பந்தாட்டத்திலும் சரி, இந்த 100 மீட்டர் ஓட்டம் என்பது தோனியின் மிகச் சிறப்பான திறமைகளில் ஒன்று. பவுலர் வீசும் பந்து பேட்டில் பட்டு வெளியேறும் அடுத்த நொடியில் ஓடத் தொடங்கும் தோனியை ரன் அவுட் செய்ய முடியாததன் காரணமும் இதுவே.