தேர்தலில் வாக்களித்த உலகின் மூத்த வாக்காளர் (Video)

குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களித்த உலகின் மூத்த வாக்காளர் (Video)

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லெடா என்ற சிறு நகரை சேர்ந்த சந்திரவைத்யா அஜிபென் என்ற 126 வயது மூதாட்டி வாக்களித்தார். 1891-ம் ஆண்டு பிறந்த இவர் மிகவும் வயது மூத்த பெண்மணி என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் உலகின் மூத்த வாக்காளர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

இவருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வயது முதிர்ந்தாலும் இன்னும் இவர் ஆரோக்கியமாகவே உள்ளார். கைத்தடியை பயன்படுத்துவதில்லை, கண்ணாடியும் உபயோகிப்பதில்லை. எந்த ஒரு பெரிய நோயும் அவருக்கு கிடையாது. வரிசையில் நிற்க முடியாது என்பதால் சந்திரவைத்யா வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தலில் வாக்களித்த உலகின் மூத்த வாக்காளர் (Video)

கடந்த மாதம் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நெகி தனது ஓட்டை பதிவு செய்தார். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் 100 வயதுக்கும் மேற்பட்ட 372 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வாக்களித்த உலகின் மூத்த வாக்காளர் (Video)