ஏஞ்சலினாவாக மாற முயற்சித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி (Video)

ஈரானைச் சேர்ந்த இளம்பெண் சாஹர், ஏஞ்சலினா ஜோலியின் முகத் தோற்றம் பெற 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Iranian woman Sahar Tabar undergoes 50 surgeries in an attempt to look like Angelina Jolie

இதுகுறித்து ஊடகங்கள், “ஈரானைச் சேர்ந்த 22 வயதான சாஹர் தாபர் என்ற இளம்பெண். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகர்.

இவர் ஏஞ்சலினாவைப் போன்றே முகத் தோற்றம் பெற விரும்பி இருக்கிறார்.

எனவே ஏஞ்சலினாவைப் போல தாடை எலும்புகள், நெற்றி, உதடுகள் என நீண்டுகொண்டே போன சாஹரின் அறுவைச் சிகிச்சைகள் தற்போது 50-ஐ தாண்டியுள்ளன.

ஏஞ்சலினாவை போல முகத் தோற்றம் மற்றும் உடலமைப்பைப் பெற சாஹர் 40 கிலோ எடைவரை குறைந்துள்ளது” என்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து சாஹர் தனது புகைப்படங்களை இன்ஸ்டர்கிராமில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஐந்து லட்சத்துக்கு மேலாக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

சாஹரைப் பின் தொடர்பவர்கள் அவர் பிரபலம் ஆவதற்காக பொய் வேஷம் போடுகிறார், ஒருவேளை இது மேக்அப்-ஆகக் கூட இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Total Page Visits: 72 - Today Page Visits: 1