படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி (Video)

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போஹரா பகுதியைச் சேர்ந்த சுமார் 70 பேர், பிர் பதாய் என்ற பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் பண்டிகையை கொண்டாட படகில் சென்றுள்ளனர்.

தாட்டா என்ற நகரம் அருகே படகு வந்த போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சென்று நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர்.

ஆனால், மீட்புப்படையினர் வர தாமதம் ஆனதால், 21 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகளவிலான மக்கள் படகில் இருந்ததன் காரணமாகவே படகு கவிழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Total Page Visits: 65 - Today Page Visits: 1