கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் !

ன்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த் (வயது 23) என்பவர் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷவ்ந்த் தாய் சரளா கடந்த சில தினங்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.நகைக்காக தாயை தஷ்வந்த் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு தஷ்வந்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் !

தஷ்வந்துக்கு குதிரை பந்தயத்தின் மீது அதிக ஆர்வம். இதனால் அவர் மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அவரை நேற்று கைது செய்தனர்.சென்னைக்கு அவரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கை விலங்கு போடப்பட்ட நிலையில் கழிப்பிடம் சென்ற தஷ்வந்த போலீசார் கண்களில் மண்னை தூவிவிட்டு தப்பிச் சென்றார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் !

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தன் பெற்றோருடன் குன்றத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில், செலவுக்குப் பணம் தராததால் தன் தாய் சரளாவை, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தஷ்வந்த் தப்பிவிட்டார் என அவரது தந்தை சேகர் போலீஸில் புகார் கொடுத்தார்.

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் !

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் செய்தியைத் தொடர்ந்து போலீஸ் தனது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு தஷ்வந்தை மும்பையில் தமிழக போலீஸார் கைது செய்தனர். தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தமிழகம் அழைத்து வரும் வேலைகளில் போலீஸார் ஈடுபட்டனர். தற்போது, மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு தஷ்வந்தை திரும்ப அழைத்து வரும்போது போலீஸ் பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் !

நீதிமன்றத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வரும்வழியில் கழிவறைக்குப் போகவேண்டும் எனக் கூறி தப்பித்திருக்கிறார் தஷ்வந்த். ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வரும் 9-ம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது மும்பை நீதிமன்றம். போலீஸார் தற்போது தஷ்வந்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் !