ஜெ. மரணம்: 60 பேருக்கு சம்மன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணனிடமும் ஜெயலலிதா சிகிச்சையின்போது தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவில் இருந்த மருத்துவர்கள் நாராயணபாபு, விமலா ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

தேர்தல்களின்போது ஜெயலலிதாவின் கைரேகைப் பதிவில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பான தடயவியல் சோதனை கோரியும் டாக்டர் சரவணன் மனு அளித்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு நேற்று (டிசம்பர் 4) சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சம்மன் அனுப்பப்பட்ட 60 பேர் யார் யார் என்ற விவரங்களை விசாரணை ஆணையம் வெளியிடவில்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்திடம் இதுவரை 25 பிரமாணப் பத்திரங்களும், 70க்கும் மேற்பட்ட புகார் கடிதங்களும் வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 55 - Today Page Visits: 2