தங்கை சென்டிமென்ட்டில் கலக்கிய சசிக்குமார்

சசிகுமார் – முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘கொடிவீரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நகர்ப்புறம் சார்ந்த கதை சசிகுமாருக்கு எடுபடவில்லை என்பதால் முழுக்க கிராமப்புறம் சார்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் கிராமத்து மண் சார்ந்த கதையாக உருவாகியிருக்கும் கொடிவீரன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக முத்தையாவுடன் இணைந்திருக்கிறார். குட்டிப்புலி படத்தில் அம்மா சென்டிமென்ட்டில் கதை அமைத்திருந்த முத்தையா இதில் தங்கை சென்டிமென்ட்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

தங்கை சென்டிமென்ட்டில் கலக்கிய சசிக்குமார்

சசிகுமாருக்குத் தங்கையாக சனுஷாவும், பசுபதிக்குத் தங்கையாக பூர்ணாவும் நடித்திருக்கிறார்கள். சசிகுமாரின் தங்கையாக சனுஷா பேசும், “எங்க அண்ணன் எதுக்க வர்றவன் இல்ல… எவனையும் எதிர்க்க வர்றவன்” என்கிற வசனமும், அதேபோல் பசுபதியின் தங்கையாக நடித்திருக்கும் பூர்ணா பேசும், “எங்க அண்ணன் ஒருத்தன அறுக்கிறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கும்… ஆனா, அறுக்கும்போது யோசிக்காது” என்கிற வசனமும் அண்ணன் மீது தங்கைகள் வைத்திருக்கும் பாசத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது.

சசிகுமார் – பசுபதிக்கான மோதல், சசிகுமார், மஹிமா நம்பியாருக்குமிடையிலான காதல், உறவுமுறை சென்டிமென்ட் எனக் கிராமத்தின் அசல் முகத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் முத்தையா ஈடுபட்டிருக்கிறார் என ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது. ரகுநந்தன் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ட்ரெய்லரில் அவரின் பங்களிப்பைப் பார்க்கையில் படத்துக்கு முக்கிய பங்காற்றிருப்பார் எனத் தெரிகிறது. சில காட்சிகளிலே கிராமத்தின் அழகை வெளிப்படுத்தியிருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.

தங்கை சென்டிமென்ட்டில் கலக்கிய சசிக்குமார்

கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கம்பெனி புரொடக்ஷன்ஸ் மூலம் சசிகுமார் தயாரித்துள்ளார். டிசம்பர் 7ஆம் தேதி வெளிவரவுள்ள கொடிவீரன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.