தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

முகலிவாக்கம் சிறுமி ஹாசினி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த், தனது தாய் சரளாவையும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானர். இதுகுறித்து ஹாசினியின் தந்தை பாபு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். தஷ்வந்த், ஹாசினியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

சென்னையை அடுத்த மாங்காட்டில் வசித்த தஷ்வந்த், கடந்த பிப்ரவரி மாதம், 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொடூரமாக கொன்றான். சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் தஷ்வந்தை கைது செய்த போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மாதங்கள் உருண்டோட, வழக்கிற்கான முக்கிய ஆதாரங்களை திரட்டாத போலீசார், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் கோட்டை விட்டனர்…

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

இதனால், கடந்த செப்டம்பர் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவனை ஜாமீனில் விட்டது. சிறுமியின் படுகொலைக்குப் பிறகு, தஷ்வந்தின் பெற்றோர் சேகர் – சரளா ஆகியோர், தங்கள் வீட்டை, குன்றத்தூருக்கு மாற்றியிருந்தனர். குன்றத்தூர் ஸ்ரீராம் சாலையில் உள்ள சம்மந்தம் நகரில், ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்தோடு, மூன்று பேரும் வசித்து வந்தனர்…

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

இந்த நிலையில், வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடந்த தஷ்வந்த், செலவிற்கு பணம் கேட்டு, அவ்வப்போது, தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை காலையில், அவனது தந்தை வேலைக்குச் சென்றுவிட, தாயாருடன், வீட்டில் இருந்துள்ளான் தஷ்வந்த்…. மதிய வாக்கில், தனது தாயார் சரளாவிடம், செலவுக்கு பணம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

இதனால் ஆத்திரமடைந்த தஷ்வந்த், தன்னை பெற்றெடுத்த தாய் என்றும் பாராமல், இரும்பு கம்பியால், சரமாரியாக அடித்துக் கொன்றுவிட்டு, தப்பியோடிவிட்டான். பணி முடிந்து மாலை வீடு திரும்பிய அவனது தந்தை, தனது மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதையும், அவர் அணிந்திருந்த நகை, மற்றும் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ந்துள்ளார். இதனையடுத்து, குன்றத்தூர் காவல்நிலையத்தில், தனது மகன் தஷ்வந்த், தனது மனைவி சரளாவை, நகை பணத்திற்காக அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டதாக புகார் அளித்திருக்கிறார்.

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!

நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், சரளாவின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து, தஷ்வந்தை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு பாவமும் அறியாத சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற தஷ்வந்த் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து உரிய தண்டனை வாங்கி தராமல் காவல்துறை கோட்டை விட்டதன் விளைவு, தன்னை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயாரை இரும்பு ராடால் அடித்துக் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறான் கொடூரன்…. இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு, மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறும் முன், தஷ்வந்தை பிடித்து, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே, அனைவரின் கோரிக்கையாகும் .

தனது தாயைக் கொலை செய்துவிட்டு தப்பிய சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி!